Friday, March 25, 2016

Impress Remote எனும் ஆண்ட்ராய்டின் பயன்பாட்டின் வாயிலாக லிபர் ஆஃபிஸின் இம்ப்ரஸ் எனும் பயன்பாட்டினை கணினியில் இயக்கலாம்

இதற்காக நம்மிடம் லிபர் ஆஃபிஸ் 4.1 பதிப்பும் அதற்கு பிந்தைய பதிப்பும்  அதனுடன் புளூடூத் அல்லது வொய்பீ வாயிலாக கணினியுடன் இணையும் வசதியும் தேவையாகும்.  முதலில்  லிபர் ஆஃபிஸை திறந்து அதன் முகப்பு திரையில் மேல்பகுதியின் கட்டளை பட்டையில் Tool=>Options=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்திடுக  உடன் விரியும் பலகத்திரையில் LibreOfficeImpress => General=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.  பின்னர் விரியும் திரையில் presentation என்பதன்கீழ் Enable Remote control என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க  அவ்வாறே மீண்டும்  மேல்பகுதியின் கட்டளை பட்டையில் Tool=>Options=> LibreOffice => Advanced=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்திடுக   அதன்பின்னர் விரியும் திரையில் Enable experimental features என்ற வாய்ப்பினைதெரிவுசெய்து சொடுக்கி இயலுமை செய்துகொள்க.  பின்னர் நம்முடைய ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு வந்து அங்கு Impress Remote என்ற பயன்பாட்டினை திறந்துகொள்க அதில்    Blue Toothஅல்லது  Wi-Fi ஆகிய இரண்டில் ஒரு இணைப்பை தெரிவுசெய்துகொள்க அதன் பின்னர் LibreOffice Ipமுகவரியிட்டு அதனை இணைத்து கொள்க பின்னர்   Libre Office முகப்புதிரைக்கு சென்று அதன் திரையின் மேலே SlideShow =>ImpressRemote=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் தோன்றிடும் திரையில் preview ,timer, submenu போன்றவாய்ப்புகளை சரியாக அமைத்து  படவில்லை காட்சியை இயக்கி  காட்சியை திரையில் காண்க இந்த வழிமுறையில் லிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை படிக்கமட்டுமேமுடியும் திருத்தம் செய்யமுடியாது .
7

No comments: