Sunday, March 27, 2016

சுய இன்பம் நன்மைகள் அதிகமா? தீமைகள் அதிகமா?

உலகம் முழுவதும் பருவமடைந்த ஆண்கள், பெண்கள் பலரிடம் சுய இன்பப் பழக்கம் நிலவி வருகிறது. சிலரிடம் பருவமடையும் முன்னரே சிறு பிராயத்திலேயே இப்பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இவர்கள் பிஞ்சிலே பழுத்தவர்கள். சிலரிடம் மணமான பின்னரும் கூட நாற்பது, ஐம்பது வயதுக்கு மேலும் கூட இப்பழக்கம் நீடிக்கிறது. 
சாதாரணமாகப் பிறப்புறுப்பை தீண்டும் போது ஏற்படும் வித்தியாசமான புலனுணர்வு, அடிக்கடித் தொட்டு, அசைத்து அதிக இன்பம் அனுபவிக்கும் மனநிலை ஏற்பட்டு பின்னர் அப்பழக்கத்திற்கு பலரும் அடிமையாகி (Addict)
விடுகின்றனர். தற்செயலாகத் துவங்கும் சுய இன்பப் பழக்கத்திலிருந்து அவ்வளவு சீக்கிரம் எவரும் மீள முடிவதில்லை.
துணையின்றி, தன்னந்தனியாக உறுப்புகளை அசைத்து சுயமாக காம இன்பம் காணும் இப்பழக்கத்திற்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன. ஆபாச பத்திரிகைகள் வாசிப்பு, ஆபாச படங்கள் பார்த்தல், நட்பின் மூலமாக ஆபாசங்களைப் பேசிப் பகிர்தல், ஆபாசச் சிந்தனைகள், கனவுகளில் மூழ்குதல், மன எழுச்சி போன்ற அகபுறக் காரணிகளும், வாழ்நிலைகளும், சூழ்நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சுய இன்பப் பழக்கம் குறித்து ஆங்கில மருத்துவர்களும், மாற்றுமுறை மருத்துவர்களுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சுய இன்பப் பழக்கம் இயற்கையானது. இதனால் உடல் நலத்திற்கு எந்தக் கேடுகளும் ஏற்படுவதில்லை. உடலுறவுக்குப் பின்னர் ஏற்படும் சிறு பலவீனத்தைப் போலவே சுய இன்பத்திற்குப் பிறகு சிறிய பலவீனம் ஏற்படும். ஓய்வுக்குப் பின்னர் சரியாகி விடும். சிறுநீர் கழிப்பதிலோ, உமிழ்நீரை துப்புவதிலோ எப்படி எந்தப் பாதிப்பும் இல்லையோ அதேபோல விந்து வெளியேற்றத்திலும் எந்தப் பாதிப்பும் இல்லை. சுய இன்பப் பழக்கத்தினால் பின் விளைவுகள் ஏற்படும் என்று சொல்வது தவறான கருத்து. உடலுறவின் போது உடல் எப்படி இயங்குகிறதோ, எப்படி இன்பமும் உச்ச நிலையை அடைகிறதோ, அதேபோன்ற அனுபவம்தான் சுய இன்பத்திலும் ஏற்படுகிறது. மேலும் இளைஞர்களும், பெண்களும் பாலியல் வேட்கை அதிகரிக்கும் போது தவறுகள் செய்யாமல் இருக்கவும், எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களில் விழாமல் பாதுகாப்பாக இருக்கவும் ஆரோக்கியமான மாற்றாக நல்ல வடிகாலாக சுய இன்பப் பழக்கம் அமைகிறது. எனவே சுய இன்பத்தில் பாலியல் உளவியல் நிபுணர்களும் உலகம் முழுவதும் கூறி வருகின்றனர்.
அமெரிக்கா போன்ற செல்வச் செழிப்புள்ள நாடுகளில் சுய இன்பப் பழக்கத்திற்கு உதவியாக, ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு போன்ற செயற்கைச் சாதனங்கள் கடைவீதிகளில் விற்கப்படுகின்றன. அங்கு பாலியல் சுதந்திரம் என்ற பெயரில் கட்டுப்பாடற்ற, பின் விளைவுகளை ஏற்றுக் கொள்கிற நெறி முறையற்ற பாலியல் வாழ்க்கை பெருகிவிட்டது. ஓர் ஆண் பல பெண்களை மணப்பதும், ஒரு பெண் பல ஆண்களை மணப்பதும், அதற்கு வசதியாக சாதாரண காரணங்களுக்காக சுலபமாக விவாகரத்துப் பெறுவதும், ஓரினச் சேர்க்கையும், மேற்கத்திய வாழ்க்கைப் போக்குகளாக மாறிவிட்டன. 
ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குப்பஞ்சர் போன்ற மாற்றுமுறை மருத்துவங்களில் சுய இன்பப் பழக்கத்தினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு ஏராளமான மருந்துகள் உண்டு. இவை பற்றி மாற்றுமுறை மருத்துவர்கள் பேசினால், எழுதினால், விளம்பரம் செய்தால் "அவை எல்லாமே விஞ்ஞான விரோதமானவை" என்னும் 'தவறான கருத்துகள் பொய்யான விளம்பரங்கள்' என்றும் "இளைஞர்கள் ஏமாற வேண்டாம்" என்றும் ஆங்கில மருத்துவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 
சுய இன்பப் பழக்கத்தின் விளைவுகள் குறித்து மாற்றுமுறை மருத்துவர்கள் கூறும் கருத்துக்கள் எல்லாம் நூறு சதவீதம் பொய் என்று ஓங்கி உரைக்கும் ஆங்கில மருத்துவ நிபுணர்கள் 'சுய இன்பப் பழக்கமுள்ள ஆண்கள், பெண்களில் பாதிக்கு மேற்பட்டோர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்' என்பதை நிரூபிக்க முடியுமா? சில மருத்துவர்கள் சுய இன்பப் பழக்கத்தை அளவோடு வைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றனர். அது என்ன அளவு? உச்சி வெயில் நேரத்திலும் கூட நிர்வாணத் திரைப்படங்களைப் பார்த்து உணமேறித் திரியும் நரம்பு நோயாளிகளுக்கு (இளைய பாரதம்) என்ன அளவு தேவை? பள்ளியிலேயே மாணவியர்களுக்கு சுய இன்பப் பழக்கத்தில் 
ஆண், பெண் இருவரும் உள்ளத்தாலும், உடலாலும் ஒன்றி தான்தோன்றித்தனமான நினைத்த போதெல்லாம் எச்சில் துப்புவது போல் விந்தினை வெளியேற்றுவதும் இயல்பானதுதான். அதனால் எந்த பாதிப்புமில்லை என்று தைரியமூட்டுகின்றனர். பிறந்த குழந்தைக்கும் எச்சில் சுரக்கும். ஆனால் விந்து சுரக்க பதினைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். விந்து இனப்பெருக்க ஆற்றலுள்ளது. விந்து ஒவ்வொரு முறை வெளியேறும் போதும் தலை முதல் கால் வரை மொத்த உணர்வு மண்டலமும் பரவசக் கிளர்ச்சி ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கையிலும், எச்சில் துப்பும் போதும் எவருக்கும் இந்த அனுபவம் ஏற்படாது. நரம்பு மண்டலத்தினூடே ஓடிப் பாய்ந்த உணர்வு எழுச்சி ஏற்படுத்தி அதுவே தொடர்கதையானால், நரம்பு மண்டலத்தையே நாசப்படுத்தி விடும் வீரியமுள்ள விந்தினை சிறுநீருடன், எச்சிலுடன் எப்படி ஒப்பிட முடியும்?
மணமாகாமல், வயதாகிக் கொண்டே செல்லும் இளைஞர்கள், யுவதிகளிடம் ஏதேனும் சில சந்தர்ப்பங்களில், கட்டுப்படுத்த இயலாத பாலுணர்வு எழுச்சி மேலோங்கித் துயரப்படுத்தும் சந்தர்ப்பங்களில் சுய இன்பப் பழக்கத்தில் மணவாழ்க்கயில் மனைவி நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அல்லது கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களிலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் சுய இன்பம் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலைகள் அனைத்து முறைகளைச் சேர்ந்த மருத்துவர்களும் ஏற்கக் கூடியவை. ஆனால் இன்னு பல்வேறு மருத்துவ சஞ்சிகைகளில் இளைஞர்களும், பருவப் பெண்களும் கேள்வி பதில் பகுதியில் தெரிவிக்கும் அனுபவங்களையும், எழுப்பும் சந்தேகங்களையும் உற்றுக் கவனிக்க வேண்டும். நான்காண்டு பழக்கம் என்றும், எட்டாண்டுப் பழக்கம் என்றும் தினமும் சுய இன்பத்தில் 
நகர்ப்புறங்களில் திரும்பும் திசையெல்லாம் ஆபாச சுவரொட்டிகள், விரசமான காட்சிகள், ஆபாசமான ஆடல், பாடல்களும் நிறைந்த திரைப்படங்கள், ஆபாசப் படங்களும், கதைகளும் நிறைந்த பத்திரிகைகளின் அதிகரிப்பால் இயற்கைக்கு மாறாக பாலியல் கிளர்ச்சி தூண்டப்பட்டு அடிக்கடி இளம் வயதினர் சுய இன்பத்தில் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வு வேண்டாமா? வெளிச்சத்திலேயே விழும் விட்டில் பூச்சிகளாக மாறிவிட்ட இளம் வயதினர் பாதங்களை ஆக்கப்பூர்வமான பாதைகளில் திருப்பி விடுவதில் மருத்துவர்களுக்கு பங்கில்லையா?
சுய இன்பப் பழக்கத்தினால் நன்மைகள் அதிகமா? தீமைகள் அதிகமா? என்று சாதக(Positive side) பாதகங்களை (Negative sides) விரிவாக அனைத்து முறை மருத்துவர்களும் விவாதித்து ஒருங்கிணைந்த முடிவுகளுக்கு வர வேண்டியதும் அதனடிப்படையில் இளைய தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டியதும் நிகழ்காலத்தின் அவசியம். 
ஆங்கில மருத்துவத்திலோ உயர் பட்டம் பெற்ற மாமேதை டாக்டர் சாமுவேல் ஹானிமன் M.D. அவர்களால் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவிய மருத்துவமுறை ஹோமியோபதி. இது நவீனமான அடிப்படைகளையும் அணுகுமுறைகளையும் கொண்டது. மனிதனின் உடலை மட்டுமல்ல மனதையும் சேர்த்து முழுமையாக ஆய்வு செய்து துயருற்ற மனிதர்களை நிரந்தரமாகக் குணப்படுத்தும் பக்க விளைவுகள் இல்லாத வைத்திய முறை ஹோமியோபதி. இந்த நவீன மருத்துவத்தில் சுய இன்பப் பழக்கத்திலிருந்து மீளவும், பின் விளைவுகளிலிருந்து மீளவும் பல மருந்துகள் உள்ளன. 
பிக்ரிக் ஆசிட்: 
அதிக சுய இன்பப் பழக்கத்தால் முதுகுத்தண்டு பாதிப்பு, உடல் முழுவதும் களைப்பு, கைகள், கால்கள் கன உணர்வு, தன் முன் எந்தப் பெண் இருந்தாலும் காம உணர்வு தீ போல் அதிகரித்தல், வலியுடன் விறைப்பு ஏற்படுதல்(Priapism).
அனகார்டியம்: 
சுய இன்பப் பழக்கத்தால் ஞாபக மறதி அதிகரித்தல், தளர்ச்சி ஏற்படுதல், தொடர்ந்து உட்கார்ந்திருக்க அல்லது படுத்தே கிடக்க விரும்புதல் (இதுதான் இளமைக்கு அடையாளமா?)
காலிபுரோமேட்டம்: 
சுய இன்பத்தின்போதோ, பின்னரோ வலிப்பு ஏற்படுதல், முழுமையான ஞாபக மறதி, அறிவுத்திறன் மழுங்குதல், தூக்கக் கலக்கம், கால்களில் கடும் பலவீனம், நிமிர்ந்து நிற்க இயலாத நிலை. 
ஜெல்சிமியம்: 
சுய இன்பப் பழக்கத்தால் உறுப்பு பலவீனம் அடைதல், உடல் தசைகளில் பலவீனம், மனக்குழப்பம், தலைசுற்றல், கை நடுக்கம். 
கோனியம்: 
நீடித்த தொடர்ந்த சுய இன்பப் பழக்கத்தின் பின்விளைவாக தானாக விந்து ஒழுகுதல் (Spermattorrohea) பெண்கள் யாராவது அருகிலிருந்தால் அல்லது தொட்டுவிட்டால் பெண்களுடன் பேசினால் விந்து ஒழுகுதல், கடும் சோர்வடைதல், வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படுதல். 
நேட்ரம்மூர்: 
பாரிசவாயு போன்ற பலவீனமும், முதுகுவலியும். 
சைனா: 
கண்கள் குழி விழுகுதல், கண்களைச் சுற்றி கருநீல நிறம் படர்தல், படபடப்பு, உடல், மனத்தளர்ச்சி, எந்த வேலையும் செய்ய முடியாதளவு முடங்கிக் கிடத்தல்.
ஸ்டாபிசாக்கியா: 
சுய இன்பப் பழக்கத்துடன் எப்போதும் பாலுணர்வு பற்றியே எண்ணுதல், தாழ்வு மனப்பான்மை, குழி விழுந்த முகம், சிறு வியங்களுக்கும் கோபம், எரிச்சல், தனிமையை மட்டுமே விரும்புதல், இரவுகளில் விந்து ஒழுகுதல், முதுகு, இடுப்பு வலி ஏற்படுதல். 
அக்னஸ்காஸ்டஸ்: 
நீண்டநாள் சுய இன்பப் பழக்கத்தின் விளைவாக ஆண்மைக் குறைபாடு ஏற்படுதல், உறுப்பு சிறுத்து, குளிர்ந்து, தளர்ந்தே இருத்தல். 
பிளாட்டினா: 
பருவமடையும் முன்னரே சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையாதல், தூக்கத்தில் சுய இன்பப் பழக்கத்தில் 
ஜிங்சும்மெட்: 
மாதவிடாய் நாட்களில் சுய இன்பத்தில் 
கலாபியம் 
கீரிப்பூச்சிகளால் பெண்ணுறுப்பில் நமைச்சல் ஏற்பட்டு சுய இன்பத்தில் (Pruritus vulvae). 
மூரக்ஸ்: 
ஆண்கள் தொட்டாலே பாலுணர்வு கிளர்ந்து சுய இன்பத்தில் 
ஹையாசியாமஸ்: 
பிறப்புறுப்பை ஆடை நீக்கி காட்டுதல், ஆபாசமாகப் பேசுதல். 
ஓரிகானம் 10 கிரரியோலா: 
பெண்ணுறுப்பின் கடுமையான தினவால் செக்ஸ் உணர்வு ஏற்பட்டு சுய இன்பம் காணுதல். 
ஸ்டாபிசாக்ரியா 10 அபிஸ்மெல்: 
விதவைகளுக்கு பாலுணர்வு தூண்டுதல், கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்படுதல். 
இன்னும் பல மருந்துகள் உள்ளன. தெரிவான சிறப்பான சிகிச்சைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மனநிலை உடல்நிலைக்கேற்ற மருந்தை உரிய வீரியத்தில் உரிய கால அளவில் அனுபவமிக்க ஹோமியோ மருத்துவர்கள் கொடுத்து வரும்போது சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானவர்களையும், பின் விளைவுகளின் தாக்குதல்களுக்கு ஆளானவர்களையும் குணப்படுத்த முடியும். 

வெள்ளை முடியைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள்

இன்றைய இளம் தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் வெள்ளை முடி. இளமையிலேயே வெள்ளை முடி வருவதால் பலரும் ஹேர் கலரிங் சிறந்த வழி என்று செய்கிறார்கள். ஆனால் அப்படி வெள்ளை முடியை மறைக்க கலரிங் செய்து கொள்வதால், முடியின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். மாறாக இயற்கை வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் எளிதில் வெள்ளை முடியை நீக்குவதோடு, முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். இங்கு வெள்ளை முடியைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 1/5 எலுமிச்சை சாறு மற்றும் நெல்லிக்காய் நெல்லிக்காய் பொடியுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம்.

வெங்காய பேஸ்ட் வெங்காயம் முடி உதிர்வதைத் தடுப்பது மட்டுமின்றி, வெள்ளை முடியையையும் போக்கும். அதற்கு வாரம் ஒருமுறை வெங்காயத்தை அரைத்து, அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டு
எலுமிச்சை சாறு மற்றும் நெல்லிக்காய் நெல்லிக்காய் பொடியுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம். 2/5 வெங்காய பேஸ்ட் வெங்காயம் முடி உதிர்வதைத் தடுப்பது மட்டுமின்றி, வெள்ளை முடியையையும் போக்கும். அதற்கு வாரம் ஒருமுறை வெங்காயத்தை அரைத்து, அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். 3/5
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு வெள்ளை முடி கருப்பாக, தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, தினமும் தலைக்கு தடவி வர வேண்டும். இதனால் நிச்சயம் உங்கள் தலைமுடி கருமையாவதோடு, வேறுசில முடி பிரச்சனைகளும் நீங்கும். 4/5 
கேரட் ஜூஸ் கேரட் ஜூஸை தினமும் குடித்து வருவதன் மூலமும் வெள்ளை முடியைத் தடுக்கலாம். மேலும் கேரட் ஜூஸ் முடியை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ளும். ஆகவே உங்களுக்கு முடி பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், கேரட் ஜூஸ் குடியுங்கள். 5/5 எள் மற்றும் பாதாம் எண்ணெய் எள்ளை அரைத்து பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, சில வாரங்கள் தொடர்ந்து தடவி வர, வெள்ளை முடியை கருமையாக்கலாம். மேலும் நிபுணர்களும் இம்முறையால் வெள்ளை முடி கருமையாவதாக கூறுகின்றனர். இம்முறையினால் நல்ல பலனைக் காண, எள்ளை நன்கு மென்மையாக அரைத்து, பாதாம் எண்ணெயில் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

பல் வலி, வாய் துர்நாற்றம், பிரச்சனை நீங்க

 நம் இந்திய நாடு பல்வேறு விஷயங்களுக்கு புகழ் பெற்றவையாகும். அப்படிப்பட்ட ஒன்று தான் மசாலாக்கள். மசாலா என்றாலே நம் நினைவில் முதலில் வருவது இந்தியா தான். நம் உணவுகள் காரசாரமாக, சுவைமிக்கதாக இருப்பதற்கு காரணமே நம்மிடம் உள்ள பல வகையான மசாலாக்கள் தானே. உணவுகளின் சுவைக்கு மட்டும் தான் இந்த மசாலாக்களா என்றால் கண்டிப்பாக இல்லை. மசாலாவில் கூடுதலாக பலவித உடல் நல பயன்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஈறுகளில் இருந்து இரத்தம் கசிகிறதா? இத டெய்லி ஃபாலோ பண்ணுங்க... மிகவும் பழங்காலம் முதலே ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த மசாலா பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சிலருக்கு தெரிந்திருந்தாலும் பலருக்கும் தெரிவதில்லை. பல விதமான நோய்களுக்கு நிவாரணம் அளிக்க பல விதமான மசாலாக்கள் உதவுகிறது. ஒவ்வொரு மசாலாவின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரு புத்தகமே எழுதி விடலாம். சமையலறைக்கு மட்டும் தான் மசாலா என்றில்லாமல் இப்படி உடல்நல ஆரோக்கியத்திற்கும் பயன்படும் மசாலாக்கள், வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் உதவுகிறது. அதைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாமா? பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! 1/20 பல்வலி பல் துவாரங்கள், தொற்றுக்கள் மற்றும் ஈறு நோய்கள் போன்ற பல்வேறு காரணங்களால் தான் பல்வலி ஏற்படுகிறது. பல் மருத்துவரை அணுகுவது கட்டாயம் தான் என்றாலும் கூட, உடனடி இயற்கை தீர்வை அளிக்கும் சில வழிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

மாதவிலக்கு பிரச்னையை போக்கும் வாழைப்பூ

மகளிர் வாரத்தை முன்னிட்டு, கருப்பை கோளாறு மற்றும் மாதவிலக்கு பிரச்னைகளை பற்றி நாட்டு மருத்துவத்தில் காண்போம். மாதவிலக்கு சமயத்தில் சிலருக்கு கடுமையான வலி இருக்கும். கருப்பையில் கிருமிகளின் தாக்கத்தால் வெள்ளைபோக்கு ஏற்படுகிறது. கருப்பையில் ஏற்படும் நீர் கட்டிகள், நார் கட்டிகள் போன்றவற்றால் பெண்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வலியை போக்க கழற்சிகாய் பயன்படுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வீக்கத்தை கரைக்ககூடிய தன்மையை கொண்டது. மாதவிலக்கு சமயத்தில் இடுப்பு வலி, வயிறு வலி, மார்பக வலி ஏற்படும்போது, கழற்சிகாயை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து அரைத்து சாப்பிடுவதால் வலி குறையும். 

முறையற்ற மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முள்ளங்கி விதை, கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை, கறிவேப்பிலை.முள்ளங்கி விதையை பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் ஒருபிடி கறிவேப்பிலை, அரை ஸ்பூன் கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மாதவிலக்கிற்கு 10 நாட்களுக்கு முன்பு இருந்து இதை குடித்துவர மாதவிலக்கு பிரச்னை தீரும்.மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். 

வில்வ இலை ஒருபிடி எடுத்து பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஆறிய பின்னர் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து குடித்தால் அதிக உதிரப்போக்கு சரியாகும். காலை, மாலை என 3 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.மாதவிலக்கு சீராக இருப்பது அவசியம். அதிக உதிரப்போக்கால் உடல் பலவீனம் ஏற்படும். 3 நாட்கள் வரவேண்டிய மாதவிலக்கு அதிகநாட்கள் தொடரக்கூடாது. இப்பிரச்னைக்கு வில்வ இலை அற்புத மருந்தாகிறது. ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும். அருகம்புல் சாறு கால் டம்ளர் அளவுக்கு வெறும் வயிற்றில் காலையில் குடித்துவர அதிக உதிரப்போக்கு சரியாகும். 

வாழைப் பூவை பயன்படுத்தி ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். வாழைப் பூவை பொரியல் செய்வது போன்று சுத்தப்படுத்தி நீர் விடாமல் பசையாக அரைக்கவும். ஒரு ஸ்பூன் வாழைப்பூ பசையுடன் ஒரு ஸ்பூன் புளிப்பில்லாத தயிர் சேர்க்கவும். இதை காலை, மாலை சாப்பிட்டுவர அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும். வெள்ளைப்போக்கிற்கு இட்லி பூ மருந்தாகிறது. இதை தேனீராக்கி குடிப்பதால் வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும்

பற்களை பாதுகாக்க டிப்ஸ்

பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும், முக அழகும் கெட்டுப் போய்விடும். பல் சொத்தையைக் கண்டு கொள்ளாமல் விட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்க செய்து பல்லை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும். தற்பொழுது உள்ள சிகிச்சை முறைகளின் மூலம் பல்லின் வேர்ப்பகுதியை பாதுகாத்து பல்லை விழாமல் காத்துக் கொள்ள முடியும். சொத்தைப் பல்லுக்கு ஆரம்பத்திலேயே வேர் சிகிச்சை செய்வதன் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை பாதுகாக்க முடியும் என்கிறார் பல் டாக்டர் கைலின். 
சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது. குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும். 

சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. எச்சிலில் உள்ள ஏசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது. பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.

 பல்லில் சொத்தை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது பல் சொத்தை வாயில் தொந்தரவை ஏற்படுத்தும் போதே பல் மருத்துவரிடம் காட்டி வேர் சிகிச்சை மூலம் பாதுகாத்துக் கொள்ள லாம். வேரின் தன்மையைப் பொறுத்து பல்லின் ஆயுள் கூடும். பல்லின் வேர்ப்பகுதியில் பாதிப்பு ஆரம்பித்த உடன் கண்டறிந்தால் செயற்கை வேர் வைத்து பல்லை உறுதியாக்கி அதன் மீது உரை போட்டு பல்லை உயிருடன் காப்பாற்றி விட முடியும். இந்த வேர் சிகிச்சையின் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை காப்பாற்றலாம். வேர் சிகிச்சை என்பது எந்த வயதினருக்கும் செய்யலாம். சிறு வயது குழந்தைகளுக்கு கடைவாய்ப்பல் சொத்தை ஏற்பட்டால் அந்தப் பல் 12 வயது வரை அவர்களுக்குத் தேவைப்படும். அதற்கும் வேர் சிகிச்சை உள்ளது. 

பொதுவாக வயதானவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் ஏற்கனவே உடலில் உள்ளவர்களுக்கும் அதற்கான அடிப்படை பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர் வேர் சிகிச்சை செய்யப்படும். வேர் சிகிச்சையின் பின்னர் பல்லில் வலி மற்றும் சேதம் எதுவும் இன்றி நார்மலான பல் போலவே பயன்படுத்தலாம். இதே போல் பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்யத்தையும், முகத்தில் அழகையும் பாதுகாக்க முடியும். 

பல் ஈறு நோய்—ஜாக்கிரதை

பற்களைத் தாக்கும் நோய்களில், பல் ஈறு நோய் இன்று உலகத்தில் சர்வ சாதாரணமாகி வருகிறது. இந்த நோயில் ஒளிந்திருக்கும் ஆபத்து என்னவென்று தெரியுமா? ஆரம்ப கட்டத்தில் நமக்கு எந்த அறிகுறியும் தெரியாது! வாயில் ஏற்படும் நோய்களில் பல் ஈறு நோய் ஒரு பெரிய பிரச்சினையாகி வருவதாக சர்வதேச பல் பத்திரிகை (International Dental Journal) சொல்கிறது. அதிக வலி, வேதனை மட்டுமல்லாமல் சாப்பிடக்கூட முடியாதளவுக்கு ஒருவரை இது பாதிக்கிறது. பல் ஈறு நோயைத் தடுக்க, அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.

அறிகுறிகள்

இந்த நோயில் பல கட்டங்கள் இருக்கின்றன. முதலாவது, ஈறுகள் வீங்கும். இதற்கு ஜின்ஜிவிட்டிஸ் என்று பெயர். ஈறுகளிலிருந்து இரத்தம் கசிவது இதற்கு ஒரு அறிகுறி. இது பல் தேய்க்கும்போது, ஃப்ளாஸிங் செய்யும்போது (flossing), டாக்டர் ஈறுகளை சோதிக்கும்போது, அல்லது காரணமே இல்லாமல்கூட ஏற்படலாம்.
இதைக் கவனிக்காவிட்டால் பிரியோடான்டிஸ் (periodontitis) என்ற அடுத்த கட்ட ஈறு நோய் உண்டாகும். இந்தக் கட்டத்தில், பல்லைத் தாங்கிப் பிடித்திருக்கும் எலும்புகளும் ஈறு திசுக்களும் (tissues) அழிய ஆரம்பிக்கும். பெரும்பாலும், இந்த நோய் முற்றிப்போகும்வரை அதற்கான அறிகுறிகள் தெரியாது. பல்லுக்கும் ஈறுக்கும் இடையே இடைவெளி, பற்கள் ஆடுவது, பற்களுக்கு இடையே இடைவெளி, வாய் துர்நாற்றம், ஈறுகள் குறைந்து பற்கள் மட்டும் பெரிதாக தோன்றுவது, ஈறுகளில் இரத்தம் கசிவது போன்றவை பிரியோடான்டிசின் அறிகுறிகள்.

காரணங்கள், விளைவுகள்

பல் ஈறு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று பிளேக் (plaque). பற்கள்மீது பாக்டீரியா படர்ந்து இருப்பதுதான் பிளேக். இந்த பாக்டீரியாவை நீக்கவில்லை என்றால் ஈறுகள் வீங்கிவிடும். இதைக் கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் பற்களிலிருந்து ஈறுகள் விலகி, ஈறுகள் ஓரம் பாக்டீரியா வளர ஆரம்பித்துவிடும். பிறகு, ஈறுகள் வீங்க வீங்க எலும்பு திசுக்களும் ஈறு திசுக்களும் அழிய ஆரம்பித்துவிடும். பிளேக் அதிகமாகப் படியப் படிய, அது கடினமாகிவிடுகிறது. இதற்கு பெயர்தான் கால்குலஸ் (calculus) அல்லது டார்டர் (tartar). பிளேக்கை போல இதை எளிதில் நீக்க முடியாது. அதனால், இது ஈறுகளை மிக மோசமாகப் பாதித்துவிடுகிறது.
சரியாகப் பராமரிக்கப்படாதத பற்கள், எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகள், வைரஸ் கிருமி தொற்று, மன அழுத்தம், கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய், அளவுக்கு மிஞ்சிய குடி, புகையிலை, பிரசவ காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை பல் ஈறு நோய் வருவதற்கு மற்ற காரணங்களாக இருக்கின்றன.
ஈறு நோய் பல விளைவுகளை ஏற்படுத்தலாம். இதனால் பல் வலி ஏற்படலாம், பல்லை பிடுங்க வேண்டியிருக்கலாம், உணவை மென்று சாப்பிடுவதும் பேசுவதும் கஷ்டமாகிவிடலாம். முக அழகும் பாதிக்கப்படலாம். பல் நோய் பல நோய்களுக்குக் காரணமாவதால், பற்களை நன்றாகப் பராமரியுங்கள்.

சிகிச்சைகள்

பல் ஈறு நோய் இருப்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? இங்கு சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் ஏதாவது உங்களுக்கு இருந்தால், நல்ல பல் மருத்துவரை உடனே பாருங்கள்.
பல் ஈறு நோயைக் குணப்படுத்த முடியுமா? ஆரம்ப கட்டமாக இருந்தால், அதைக் குணப்படுத்துவது சுலபம். பிரியோடான்டிஸ் நோயாக இருந்தால் அது இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பல் மருத்துவர்கள், பிளேக்கையும் டார்டரையும் பற்களிலிருந்து நீக்குவார்கள்.
பற்களை நன்கு பராமரிப்பதற்கு நல்ல பல் மருத்துவமனைகள் அருகில் இல்லையென்றால், கவலைப்படாதீர்கள். வரும்முன் காப்பதே சிறந்தது. அதை நீங்களே செய்யலாம்; பற்களை ஒழுங்காக, சரியாக பராமரித்தால் முத்து பற்களுக்கு நீங்கள் சொந்தக்காரர்கள் ஆகலாம்!

பல்வலியை போக்கும் இயற்கை மருந்து பொருட்கள் !

நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.
1.பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டடும்.
2.கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.
3.எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம்.
4.வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும்.
5.அசோக மரப்பட்டையுடன் உப்பு சேர்த்து பொடியாக்கி அதில் பல் துலக்கினால் பல் ஈறுகள் வலுப்படும், பல் நோய்கள் குணமாகும்.
6.ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் காய வைத்துக் கொள்ளவும். இத்துடன் படிகாரம் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் பல் துலக்கி வந்தால் பல் தொடர்பான நோய்கள் வராது.
7.ஆலமரத்துப் பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் நோய்கள் குணமாகும்.
8.ஆலமரத்துப் பட்டையை பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பல் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும்.இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் பல் வலி குணமாகும்.
9.உப்புடன் கொய்யா இலையைச் சேர்த்து அரைத்து, உலர்த்திப் பொடி செய்து பின்னர் பல் துலக்கலாம். இதன் மூலம் பல் வலி மற்றும் ஈறு வீக்கம் குணமாகும்.
10.எலியாமணக்கு குச்சியால் தினமும் பல் துலக்கினால் பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
11.எலுமிச்சம் பழத்தின் தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து பல் தேய்க்க பயன்படுத்தலாம். இதன் மூலம் பல்லின் பளிச் தோற்றத்தை பாதுகாக்கலாம்.
12.ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம், பல் அரணை, ஈறுகளில் ஏற்படும் புண் ஆகியவை குணமாகும்.
13.கிராம்பு, கொட்டைப் பாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல் வலி மறையும்.

Saturday, March 26, 2016

Download Microsoft Office 2013 Full Offline installer

English:
Direct Download Link for Standalone Offline Installer (32-bit) (624 MB)
Direct Download Link for Standalone Offline Installer (64-bit)(702 MB)
 
மைக்ரோசப்ட் ஆபிஸ் 2003 நிறுவ உங்கள் கணினி குறைந்தபட்ச திறன் கீழ்கண்டபடி உள்ளதாக இருக்க வேண்டும்.
System Requirements for installing Microsoft Office 2013

  • 1GHZ or greater x86/x64 processor
  • 1GB RAM for 32bit and 2GB for 64bit
  • 3.5Gb free hard disk space.
  • Supported O.S: Windows 7, Windows 8, Windows Server 2008 R2 or newer.
  • Graphics: Directx10 graphics card /1024×576 resolution

இலவச ஆடியோ வீடியோ கன்வெர்ட்டர் உங்களுக்காக சுட்டி இந்த மென்பொருள்

VOB, FLV, MPG, AVI, MPEG, MOV, WAV, MP3 into MP3, AVI, WAV, WMV, MPEG, FLV, MKV, RM, 3GP, 3GPP2, MOV and iPod video format.

வீடியோ பார்க்க, வெட்ட, மாற்ற புகைப்படம் மாற்ற அனைத்திற்கும் ஒரே மென்பொருள் இலவசமாக

நண்பர்களே நாம் எப்பொழுதும் வீடியோக்களை பார்க்க ஒரு ப்ளேயர் அந்த வீடியோவை கட் செய்ய வேறோரு மென்பொருள் வீடியோவை வேறொரு கோப்பின் வடிவாக மாற்ற ஒரு மென்பொருள்   உங்கள் போட்டோவினை வேறொரு அளவிற்கு மாற்ற போட்டோவினை ஸ்லைடு ஷோவாக மாற்ற என்று பலதரப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்துவோம்.


இதன்மூலம் காலநேரமும் கணிணியில் செய்திறன் மற்றும் வன் தட்டின் இடமும் அதிகரிக்கும் ஸ்டார்ட் மெனுவில் அது ஒரு நீளத்திற்கு தனியாக இடத்தினை அடைத்துக் கொண்டிருக்கும்.  இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஒரு நான்கு மென்பொருள் என்ஜினியர் சேர்ந்து ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருளை உருவாக்கி இலவசமாக கொடுத்திருக்கின்றனர். இந்த மென்பொருளின் பெயர் மீடியா கோப்.


இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பின் வடிவங்கள்

வீடியோ - mp3, wav, aac, wma, flac, m4a, ac3, rmvb, mp4, 3gp, wmv, mov, avi, divx, mpg, flv, mkv, vob இது சில மட்டுமே இன்னும் நிறைய

சப்டைட்டில் இல்லாத திரைப்படங்களில் சப்டைட்டில் தனியாக சேர்க்க முடியும்.

மேற்கூறிய அனைத்து கோப்புகளும் வீடியோ மாற்றியாக செயல்படும்.  இந்த கோப்புகளிலிருந்து எம்பி3 பிரித்தெடுக்க முடியும்.

புகைப்படங்கள் -  jpg, bmp, gif, tiff, png, emf, wmf

மென்பொருளின் அளவு 7.92 எம்பி மட்டுமே.

முற்றிலும் இலவசம் மென்பொருள்

மென்பொருள் தரவிறக்க சுட்டி 

உங்கள் புகைப்படத்தை காலண்டராக மாற்றி அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டுமா

 இங்கு சென்று உங்கள் குழந்தைகள் புகைப்படத்தை கொடுத்து ஒரு காலண்டாராக மாற்றி வீட்டில் தொங்க விட விருப்பமா வெவ்வேறு அளவுகளில் காலண்டர் பெற இணையத்தளம்.  சுட்டி



உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியில் ஒரு மென்பொருளில் வேலை செய்யும்பொழுது அது மினிமைஸ் ஆகும் அந்த மினிமைஸ் ஆன கோப்பில் ஒரு தம்ப்நெயில் உடன் மினிமைஸ் ஆக உட்கார இந்த மென்பொருள் உபயோகபடுகிறது மிகவும் உபயோகமானது கீழுள்ள புகைப்படம் பாருங்கள் புரியும். இது விண்டோஸ் எக்ஸ்பியில் மட்டுமே வேலை செய்யும்.  சுட்டி

Friday, March 25, 2016

ட்ரைவர் அனைத்தும் தானாக மேம்படுத்த மென்பொருள்

நண்பர்களே அனைவர் வீட்டிலும் கணிணி இணைய இணைப்பு இல்லாமல் இருக்கவில்லை பெரும்பாலும்.  அதனால் அனைவரும் அவ்வப்போது உபயோகப்படுத்து வன்பொருட்களுக்கு ட்ரைவர் அப்டேட் செய்வது அவசியம்.  ஒவ்வொரு முறையும் நாம் ஒவ்வொரு வன்பொருளுகும் ட்ரைவர் தேடி அப்டேட் செய்வது என்பது இயலாத காரியம். இதற்கு வருகிறது இலவச டிவைஸ் டாக்டர்.  இந்த மென்பொருளை நிறுவி விட்டால் ஒவ்வொரு வன்பொருட்களுக்கும் அப்பொழுது என்ன புதிய ட்ரைவரோ அதை தானாக தரவிறக்கி நிறுவி விடும்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி


ஒரு கணிணிக்கு இலவசமாக தரும் முதல்தர ஆன்டிவைரஸ் ஏவிஜி

லேப்டாப், டேப்ளெட்,ஐபேடு ஆகியவற்றிற்கிடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?


எக்செல்லில் தரவுகளை உள்ளீடு செய்வதற்கான ஆலோசனைகள் 
ல் எனும் பயன்பாடானது தரவுகளை கையாளச்செய்து நாம் விரும்பும் வகையில் அதன் வெளியீடுகளை வழங்குவதில் மிகச்சிறந்த கருவியாக உள்ளது. இவ்வாறான தரவுகளை ஒரு எக்செல்தாளிற்குள் எவ்வாறு உள்ளீடு செய்வது என இப்போதுகாண்போம்
1 எக்செல்தாளிற்குள் தரவுகளை உள்ளீடு செய்வதற்கு எப்போதும் படிவங்களையே பயன்படுத்திகொள்க இதற்காக விரைவு அனுகுதல் கருவிபட்டையை(Quick Access Toolbar) பயன்படுத்திகொள்க முதலில் Quick Access Toolbar என்பதில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்Customize quick Access Toolbar என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Excel Options எனும் உரையாடல்பெட்டியில்All Commands எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் அதன்கீழ் விரியும் பட்டியில் Form என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு இந்த படிவபகுதியில்add எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக உடன் Data Forms எனும் உருவபொத்தான் ஆனது இந்த விரைவு அனுகுதல் கருவிபட்டையில் அமர்ந்துவிடும் அதன்பின்னர் தரவுகளை உள்ளீடு செய்வதற்கான நெடுவரிசை கிடைவரிசை கலண்களை இந்த விரைவு அனுகுதல் கருவிகளின்பட்டையிலுள்ளநாம் உருவாக்கிய Data Forms எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மேல்மீ்ட்பு படிவமாக திரையில் மிதக்கும் அதில் நாம் விரும்பியதரவுகளை உள்ளீடு செய்துகொண்டு உள்ளீடட்டு விசையை அழுத்துக
2 இவ்வாறு எக்செல் தாளில் பின்ன எண்களை உள்ளீடு செய்திடும்போது புள்ளிக்கு பிறகு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் எண்கள் இருக்குமாறு செய்திடுவதற்காக அதாவது மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடு செய்திடும்போது அவை புள்ளிக்கு பிறகு இரண்டு மட்டும் இருக்குவேண்டும் எனவிரும்புவோம் இந்நிலையில் திரையின்மேலே கட்டளைபட்டையில் File => Options=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்திடுக பின்னர்விரியும் Excel Options எனும் உரையாடல்பெட்டியில்Advancedஎனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அதன் பின்னர் அதன்கீழ் விரியும் வாய்ப்புகளில் Automatically Insert a decimal point” என்பதை தெரிவுசெய்து கொண்டு அதன்அருகில் புள்ளிக்கு பிறகு இருக்கவேண்டிய எண்கள் இரண்டு என தெரிவுசெய்துகொள்க தரவுகளை உள்ளீடு செய்திடும் பணிமுடிவடைந்ததும் இந்த வாய்பினை தெரிவுசெய்யாது விட்டிடலாம்
3 எண்களை குறிப்பிடும்போது 7th,, 2nd, 3rd 1stஎன்றவாறு குறிப்பிடுவதற்காக =A1&IF(OR(VALUE(RIGHT(A1,2))={11,12,13}),”th”,IF(OR(VALUE(RIGHT(A1))={1,2,3}),CHOOSE(RIGHT(A1),”st”,”nd”,”rd”),”th”))
என்றவாறு வாய்ப்பாடுகளை அமைத்துகொள்க
4 தற்போது நாம் பணிபரிந்துகொண்டிருக்கும் கலண்களுக்கு மேல் உள்ள கலணை அல்லது நெடுவரிசையை நகலெடுத்து ஒட்டிடவிரும்பும்போது Ctrl + D. ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தினால் அவைகளில் உள்ள தரவுகள் மட்டுமல்லாது வாய்ப்பாடுகளும் வடிவமைப்புகளும் சேர்த்து நகலெடுத்துகொள்ளும் பிறகு தேவையான இடத்தில் இதனை ஒட்டிகொள்க
5 எக்செல்தாளில் தரவுகளை உள்ளீடு செய்திடும்போது இந்த தரவுகள் எந்த நாளில் உள்ளீடு செய்யப்டடது என அறிந்துகொள்வதற்காக நடப்பு நாளினை உள்ளீடு செய்திடவிழைவோம் அப்போது Ctrl + ; ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக நேரத்தினை உள்ளீடு செய்திட Ctrl + Shift + :ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக. நாம் எக்செல்தாளினை பயன்படுத்தும் போதெல்லாம் நாளும் நேரமும் பதிவு ஆவதற்காக TODAY(), NOW() ஆகிய இரு செயலியை பயன்படுத்தி கொள்க
6 ஒன்றிற்கு மேற்பட்ட கலண்களை தெரிவுசெய்திடும்போது Ctrl + Enter ஆகிய இரு விசைகளை சேர்த்து அழுத்துக உடன் செயலில் இருக்கும் கலண்களின் உள்ளடக்கமானது அதாவது அதிலுள்ள வாய்ப்பாடானது மற்ற கலண்களிலும் உள்ளிணைக்கப்பட்டு தெரிவுசெய்திடுவதற்காக தயாராகிவிடும்
7 நெடுவரிசைகளில் ஒரேமாதிரியாகஎண்களை அமைத்திடுவதற்காக முதலிரு கலண்களில் மட்டும் தரவுகளை உள்ளீடு செய்துகொண்டு Alt + Down கிய இரு விசைகளை சேர்த்து அழுத்துக
8 நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் பணிக்கோப்பில் ஒரு பணித்தாளிலிருந்து மற்றொரு பணித்தாளிற்க விரைவாக மாறிச்செல்வதற்காக Ctrl + Pg Up/Pg Dn கிய இரு விசைகளை சேர்த்து அழுத்துக
மேலும் எக்செல்தொடர்பான ஆலோசனைக்கு http:/easyexcell.org/ எனும் தளத்திற்கு செல்க

லேப்டாப், டேப்ளெட்,ஐபேடு ஆகியவற்றிற்கிடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?

ஐபேடில் இணையத்தில் உலாவரலாம் மின்னஞ்சலை கையாளலாம்,விளையாட்டுகளை விளையாடலாம் இசைகளை கேட்டு மகிழலாம் மின்புத்தகங்களை படித்திடலாம்
டேப்ளெட்களிலும் இவ்வாறே செய்திடலாம்.ஆயினும் டேப்ளெட்களில் கையடக்க பயன்பாடுகளை மட்டுமே பயன்படுத்திடமுடியும்
ஆனால் லேப்டாப்பில் வழக்கமான மேஜைக்கணியில் பயன்படுத்தபடும் Microsoft Office, Photoshop , complex video editing என்பனபோன்ற அனைத்து பயன்பாடுகளையும் செயல்படுத்தி பயன்பெறமுடியும்
விண்டோ டேப்ளெட்டில் மட்டும் Surface Pro 4 என்பன போன்ற வழக்கமான பயன்பாடுகளை லேப்டாப்போன்று செயல்படச்செய்து பயன்பெறமுடியும்
விண்டோ பயன்பாடுகளை விண்டோ டேப்ளெட்டிலும் லேப்டாப்பிலும் மேஜைக்கணினிபோன்ற செயல்படசெய்து பயன்பெறமுடியும்
அதுமட்டுமல்லாது ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் ஆகியவற்றின் பயன்பாடுகளை லேப்டாப்பில் செயல்படுத்தி பயன்பெறமுடியும்
வழக்கமான டேப்ளெட்,ஐபேடு ஆகியவற்றில் யூஎஸ்பி வாயில்கள் இல்லை அதனால் சுட்டியை அல்லது மற்ற கையடக்க நினைவகத்தை இவைகளில் இணைத்து பயன்படுத்திடமுடியாது
ஆனால் லேப்டாப்பில் இவைகளை இணைத்து வழக்கமான மேஜைகணினி போன்ற ப.யன்படுத்தி கொள்ளமுடியும்
மேலும் டேப்ளெட்,ஐபேடு ஆகியவற்றில் ஒரேசீரான இணைய இணைப்பினை மட்டுமே கையாளமுடியும்
மிகைவேக இணைய இணைப்பு எனில் லேப்டாப்தான் சிறந்ததாகும்

AppInventor2 என்பதை கொண்டு நமக்குத்தேவையான ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை நாமே உருவாக்கிகொள்ளமுடியும்

 உரைஅடிப்படையிலான குறிமுறையை கானொளிக்காட்சியாக மாற்றிடுகின்ற சிக்கலான நிரல்தொடர் மொழியையும் செயல்படுத்தும் திறன்கொண்டதொரு நிரல்தொடரை புதியவர்கள்கூட எளிதாக எழுதுவதற்குதவும்  ஒரு கருவியே MIT App Inventor ஆகும் .   நுகர்வோரே தங்களுடைய  பயன்பாட்டிற்குத் தேவையான மென்பொருட்களை தாங்களே அதிலும் இளைஞர்களே உருவாக்கி கொள்வதற்கான தொழில நுட்பத்தை வழங்குவதே இந்த  MIT App Inventor இனுடைய அடிப்படை நோக்கமாகும்..அதுமட்டுமல்லாது செல்லிடத்து பேசிகளில் கணினி கல்வியை அனைவருக்கும் கிடைக்கசெய்வதும் கணினிஅறிவியலை மேம்படுத்துதலும்  இதனுடைய அடுத்த திட்டமாகும்.1
இதனை 1.Scheller Teacher Education Program,2.MIT Media Lab,3.MIT Computer Science and Artificial Intelligence Lab (CSAIL)ஆகியமூன்றுநிறுவனங்களும் சேர்ந்து  http://www.apinventor.org/என்ற இணையதளத்தின் வாயிலாக செயல்படுத்தி வருகின்றன.இந்த AppInventor2 என்பது மேகக்கணினியை அடிப்படையாக கொண்டு இயங்கும் கருவியாகும் நம்மிடம் ஆண்ட்ராய்டு ஃபோன் அல்லது டேப்ளெட் இல்லையென்றாலும்  பரவாயில்லை இந்த App Inventorஇன் துனையுடன் நமக்குத்தேவையான ஆண்ட்ராய்டில் செயல்படும்  பயன்பாடுகளை உருவாக்கி நம்முடைய கணினியிலேயே emulator மூலம் சரிபார்த்த பின்னர் ஆண்ட்ராய்டு சாதனங்களில் பதிவிறக்கம்  செய்துபயன்படுத்திக்கொள்ளலாம் .
 இது குரோம் அல்லது ஃபயர்ஃபாக்ஸ் ஆகிய இரண்டு இணையஉலாவியில் மட்டுமே இயங்கும் இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் செயல்படாது என்றசெய்தியையும் மனதில் கொள்க .
   இந்தக்கருவியை நம்முடைய விண்டோ இயக்கமுறைமைசெயல்படும் கணினியில் கூட  செயல்படுத்திடமுடியும் . அதற்காகமுதலில்  http://appinv.us/aisetup_windows எனும் தளத்திற்கு செல்க. அங்கு MIT_Appinventor_Tools_2.3.0 (80 MB)எனும் கோப்பினை தேடிப்பிடித்து  தெரிவுசெய்து பதிவிறக்கம் செய்துகொள்க. பின்னர் இந்த கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நம்முடைய கணினியில் நிறுவுகைசெயலை துவங்கிடுக. உடன் இந்த மென்பொருளை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திடஅனுமதிகோரும் சிறுஉரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும். அதில்  yesஎனும் பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் திரையில்கூறும் படிமுறையை பின்பற்றி செயல்படுத்திடுக.
   இந்த சாதனம் கணினியுடன் இணைக்கப்படவில்லையென்றாலும் பரவாயில்லை அடுத்த படிமுறையாக எமுலேட்டர் அல்லது யூஎஸ்பி கம்பிவழியாக  இணைத்து தொடர்புகொள்ள   aiStarterஎன்பது உதவுகின்றது இதனை  நிறுவுகை செய்துகொள்க .
 அதற்கடுத்ததாக நம்முடைய ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு சென்று அதில் Settings ==> Developer options==> .என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் தோன்றிடும் திரையில் USB Debugging என்பது அனுமதிக்கப் பட்டிருக்கின்றதாவென சரிபார்த்துகொள்க  அல்லது Allow USB Debugging? என்றவாறு அனுமதிகோரும் திரையில் OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த செயலை ஆமோதித்திடுக .பிறகு நம்முடைய சாதனத்தினை கணினியுடன் யூஎஸ்பி கம்பிவழியாக இணைத்துபரிசோதித்திடுக  இப்போது நாம் நம்முடைய முதல் பயன்பாட்டினை உருவாக்கி பயன்படுத்திட தயாராக உள்ளோம்.
1
1.
 குரோம் அல்லது ஃபயரஃபாக்ஸ் ஆகிய இரண்டில் ஒரு இணைய உலாவியின் துனைகொண்டு http://www.apinventor.org/ எனும் இந்த இணையதளத்திற்குமுதலில் செல்க.பிறகு ai2.appinventor.mit.edu எனும் பகுதிக்குநேரடியாக செல்க. அல்லது திரையின்மேலே வலதுபுறமூலையிலுள்ள create எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் வழக்கமாக உள்நுழைவு செய்திடும் ஜிமெயில் கணக்கின் வாயிலாக உள்நுழைவு செய்திடுக.  அதற்கடுத்து விரியும் திரையில் continueஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. தற்போது MIT App Inventor2எனும் இணைய பக்கத்தின் IDEசூழலில்  நாம் உள்ளோம் இந்த திரையில் உள்ள new project என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக .
2
2
   உடன் create new App Inventor project  எனும் சிறிய உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் .அதில் இந்த புதிய செயல்திட்டத்திற்கு ஒரு பெயராக Project Name எனும் பெயர்பெட்டியில் TalkToMeஎன்றவாறு உள்ளீடுசெய்து கொண்டு  ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
3
3
 உடன் நாம் உருவாக்கப்போகும் செயல்திட்டத்திற்கு தேவையான பல்வேறு உறுப்புகளையும் கொண்டதொருவரைகலைஇடைமுகப்பு சாளரம் (Graphic User Interface) ஒன்று திரையில் விரியும் . அதில்
 1.நாம் உருவாக்கப்போகும் செயல்திட்டத்தின் பெயராகProject Name என்பதில் TalkToMeஎன்றவாறு தோன்றிடும் .
2.வடிவமைப்பாளர் (designer)அல்லது உறுப்புகளை செயல்படுத்தும் கட்டமைவை உருவாக்கிடுபவர் (blocks) ஆகிய இருநிலைகளில் இந்த திரைத்தோன்றுவதற்காக  தயாராக இருக்கும் உடன் அவ்விரு பொத்தான்களில் நாம் தெரிவுசெய்து சொடுக்குதலுக்கு ஏற்றநிலையின் திரை அமையும்  தற்போது designerஎனும் நிலையில் இந்த சாளரம் உள்ளது .
3வண்ணத்தட்டு(palettee)எனும் பலகப்பகுதியில் பயனாளர் இடைமுகப்பு (user interface) உள்ளது இதில்உள்ள வரைகலை இடைமுகப்பு சாளரத்தில் (Graphic User Interface) நாம் பயன்படுத்திடும் பயன்பாடுகளுக்குத் தேவையான கருவிகளான button, images, textboxes, text-to-speech, sensors,G PS ஆகியஅனைத்தும் வீற்றிருக்கும்..அவற்றில் நமக்குத் தேவையானவற்றை மட்டும் அமைத்துகொள்ளலாம்.
4.viewerஎனும் பலகத்தில் நாம் பயன்படுத்திடும் பயன்பாடு பல்வேறு திரைகளை கொண்டதெனில் தற்போதைய திரையின் பெயருடன் screen1 என்றவாறு தோன்றிடும்
5 Componenets  எனும் பலகமானது பல்வேறு தகவல்தொடர்புசாதனங்களுடன் செயல்படுவதை குறிப்பிடுவதாகும்..
 முதலில் இந்த செயல்திட்டத்திற்கு ஒரு பொத்தான் தேவையாகும் அதனால்   வண்ணத்தட்டிலிருந்து buttonஎனும் கருவியை இடம்சுட்டியால் பிடித்து இழுத்துவந்து  screen1 என்பதில் விட்டிடுக
6.properties எனும் பலகத்தின் பகுதியில் நாம் இழுத்துவந்து பணிப்பகுதியில் விட்டிட்ட இந்த பொத்தானிற்கு    TalkToMeஎன்றவாறு  இந்த பொத்தானுடைய பெயராக அமைத்துகொள்க
 நிற்க இந்த AppInventor2 ஆனது நாம் பயன்பாட்டினை உருவாக்கிகொண்டிருக்கும் நிலையிலேயே  நம்முடைய சாதனத்தில் அவ்வப்போது பரிசோதித்து பார்த்திடலாம். அவ்வாறு சாதனம் இல்லையெனில் எமுலேட்டரில் பரிசோதித்துபார்த்திடலாம்..
  ஏற்கனவே MIT AI2 Companion ஐ நிறுவுகை செய்திருந்தால் இந்த படிமுறையை தாண்டி அடுத்த படிமுறைக்கு செல்க இல்லையெனில்  MIT AI2 Companion App எனும் பயன்பாட்டினை அதனுடைய இணையபக்கத்திலுள்ள பதிவிறக்கும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தபின் இதுகூறும் வழிமுறையின்அடிப்படையில் நிறுவுகை செய்துகொள்க
 பிறகு இணைப்பு பட்டியில் AI Companion என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் connect to companion எனும் திரையில் Scan QR code எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Connect with code   என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நம்முடைய குறிமுறையை உள்ளீடு செய்துகொள்க..உடன் நம்முடைய பயன்பாடு சாதனத்துடன் இணந்திருப்பதை காணலாம்.
4
4
  அதன்பின்னர் மேலேவலதுபுறமூலையில் உள்ள blocks என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து  blocksஎன்ற நிலைக்கு மாறிடுக. உடன் விரியும் திரையின் blocks என்ற பலகத்தில் .button1drawer.click என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக அதன்பின்னர் viewer எனும் பலகத்தில் when button1.click do  என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து  பிடித்து இழுத்துவந்த பணிபுரியும் இடத்தில் விட்டிடுக.  இது ஒரு Event handler ஆகும்.
  பிறகு blocks என்ற பலகத்தில் Text ToSpeech.Speech என்பதை  இடம்சுட்டியால் தெரிவு செய்து சொடுக்குதல் செய்திடுக. அதன்பின்னர்  viewer எனும் பலகத்தில் Call TextToSpeech1.Speek என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து  பிடித்து இழுத்துவந்த பணிபுரியும் இடத்தில் விட்டிடுக. இது do call TextToSpeech Speek என்றவாறு செய்தியை செயல்படுத்தும் பகுதியாகும் .இது non visible components என்றவாறு அமைந்திருக்கும் .
  மேலும் blocks என்ற பலகத்தில்Text   எனும் செய்திபெட்டியை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக. அதன்பின்னர்  viewer எனும் பலகத்தில் Text என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து  பிடித்து இழுத்துவந்த பணிபுரியும் இடத்தில் விட்டிடுக. இது messageஎனும் பெயரில் அமைந்துவிடும்..
5
5
அதன்பிறகு இந்தபணிபுரியும் பகுதியிலுள்ள messageஎனும் பெயருடைய Text  பகுதியை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து இந்த செய்திபெட்டியில் Congratulations you’ve made on your first Android app என்றவாறு செய்தியை   உள்ளீடு செய்துகொள்க.
6
6
தற்போது இதனை செயற்படுத்தி சரிபார்த்திடவேண்டும் அதற்காக நம்முடைய கணினியில் Emulator என்பதுநிறுவுகை செய்யப்பட்டுள்ளதாவென மீண்டும் ஒருமுறை சரிபார்த்து அதனை செயல்படச்செய்திடுக. அதன்பின்னர் நாம் உருவாக்கிய இந்த செயல்திட்டத்தை செயல்படச்செய்வதற்காக TalkToMeஎஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால்  Congratulations you’ve made on your first Android app  என்ற செய்தி ஒலிப்பதை கேட்கலாம் .
  பிறகு இணைக்கப்பட்ட நம்முடைய சாதனத்திற்கு சென்று  அங்கு ஒலியின் அளவு போதுமானதாக இருக்கின்றதாவென சரிபார்த்துகொண்டு TalkToMeஎன்றபொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக  உடன்இந்த செய்தி நம்முடைய சாதனத்தில் ஒலிப்பதை கேட்கலாம்.