நம் இந்திய நாடு பல்வேறு விஷயங்களுக்கு புகழ் பெற்றவையாகும். அப்படிப்பட்ட ஒன்று தான் மசாலாக்கள். மசாலா என்றாலே நம் நினைவில் முதலில் வருவது இந்தியா தான். நம் உணவுகள் காரசாரமாக, சுவைமிக்கதாக இருப்பதற்கு காரணமே நம்மிடம் உள்ள பல வகையான மசாலாக்கள் தானே. உணவுகளின் சுவைக்கு மட்டும் தான் இந்த மசாலாக்களா என்றால் கண்டிப்பாக இல்லை. மசாலாவில் கூடுதலாக பலவித உடல் நல பயன்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஈறுகளில் இருந்து இரத்தம் கசிகிறதா? இத டெய்லி ஃபாலோ பண்ணுங்க... மிகவும் பழங்காலம் முதலே ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த மசாலா பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சிலருக்கு தெரிந்திருந்தாலும் பலருக்கும் தெரிவதில்லை. பல விதமான நோய்களுக்கு நிவாரணம் அளிக்க பல விதமான மசாலாக்கள் உதவுகிறது. ஒவ்வொரு மசாலாவின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரு புத்தகமே எழுதி விடலாம். சமையலறைக்கு மட்டும் தான் மசாலா என்றில்லாமல் இப்படி உடல்நல ஆரோக்கியத்திற்கும் பயன்படும் மசாலாக்கள், வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் உதவுகிறது. அதைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாமா? பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! 1/20 பல்வலி பல் துவாரங்கள், தொற்றுக்கள் மற்றும் ஈறு நோய்கள் போன்ற பல்வேறு காரணங்களால் தான் பல்வலி ஏற்படுகிறது. பல் மருத்துவரை அணுகுவது கட்டாயம் தான் என்றாலும் கூட, உடனடி இயற்கை தீர்வை அளிக்கும் சில வழிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
No comments:
Post a Comment