உங்கள் கணனி அடிக்கடி உறைந்து போகிறதா?
கணனியில் ஏதோ வேலையாக இருக்கிaர்கள். திடீரென்று கணனி தன் கட்டுப்பாட்டை இழந்து இயக்கமேதுமற்று உறைந்து (freeze) விடுகிறது. அல்லது நீலத் திரையில் வெள்ளை நிறத்தில் ஏதோ பிழை செய்திகளைக் காண்பிக்கிறது. இந்த இரு வகையான சிக்கலும் எல்லாக் கணனிப் பயனர்களும் வழமையாக எதிர்கொள்பவைதான்.
இந்த இரு சந்தர்ப்பங்களும் தவிர்க்க முடியாதவைதான் எனினும் சில விடயங்களைக் கவனத்திற் கொண்டால் ஓரளவுக்கு இவற்றைத் தவிர்க்கலாம்.
கணனி உறைந்துவிட்டது என்பதை விண்டோஸ் இயங்கு தளம் பலவாறு திரையில் காண்பிக்கும். இவற்றுள் ஒரு எப்லிகேசன் நம் விருப்பப்படி செயற்படாமல் போவது ஒரு பொதுவான அறிகுறியாகும். எப்லிகேசன் விண்டோக்கள் மினிமைஸ் செய்தது போல் டாஸ்க் பாரில் ஒட்டிக்கொண்டிருக்கும் மறுபடி முன்னர் இருந்த நிலைக்கு விண்டோவைக் கொண்டுவர முடியாமலிருக்கும். மவுஸ் பொயிண்டர் நகராமல் ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதும் கணனி உறைந்து விட்டது என்பதை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அறிகுறி.
சில வேளைகளில் This Program Performed an illegal operation and will be shut down அல்லது இந்த எப்லிகேசன் செயற்பட மறுக்கிறது. (Not Responding) போன்ற பிழைச் செய்திகளை விண்டோஸ் காண்பிக்கும். ஒரு எப்லிகேசன் செயற்பட மறுப்பதை விண்டோஸ் இவ்வாறு பல வழிகளில் காண்பிக்கும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனேகமாக அந்த எப்லிகேசனை நிறுத்தி விடுமாறு அல்லது கணனி தானாக அந்த எப்லிகேசனை மறுபடி ஆரம்பிக்கும் வண்ணம் கேன்சல் செய்து விடுமாறு விண்டோஸ் பரிந்துரைக்கும்.
நீலத் திரை மரணம் (blue Screen of death) என்பது ஒரு வெளிப்படையான அறிகுறி நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிறத்தில் சில பிழைச் செய்திகளைக் காண்பிக்கும் இந்த நிலையை Crash க்ரேஷ் எனப்படுகிறது.
குறைபாடுகளுள்ள அல்லது ஒன்றோடொன்று ஒத்திசையாத வன்பொருள் சாதனங்கள், இயங்கு தளம், எப்லிகேசன் மென்பொருள் மற்றும் ட்ரைவர் மென்பொருள் போன்றவற்றில் ஏற்படும் வழுக்கள், மற்றும் கணனி நினைவகத்தில் ஏற்றப்படும் அதிக சுமை என்பன கணனி க்ரேஷ் ஆவதற்கும் ப்ரீஸ் ஆவதற்கும் முக்கிய காரணங்களாகும்.
இவற்றுள் நினைவகத்தில், அதிக சுமை ஏற்றுவது பொதுவான ஒரு காரணியாகும். கணனி செயற்பட, போதுமான அளவு நினைவகம் அவசியம். இதனை RAM ரேம் அல்லது Random Access Memory எனப்படும். கணனி ஒரு நேரத்தில் கையாளக் கூடிய அளவை விட மேலதிகமாக சுமை ஏற்றும்போது கணனி தற்காப்பு நடவடிக்கையாக க்ரேஷ் ஆகிவிடுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட எப்லிகேசன்களை ஒரே நேரத்தில் இயக்க முற்படுவதே இவ்வாறு கணனி உறைந்து விடுவதற்கான பொதுவான காரணமாகும். அதனால் நீங்கள் பயன்படுத்தாத எப்லிகேசனை நிறுத்தி விடுவது கணனியின் நினைவகச் சுமையைக் குறைத்துவிடும்.
சில எப்லிகேசன்களுக்கிடையிலான முரண்பாடுகளும் (Conflicts) கணனி க்ரேஷ் ஆவதற்குரிய மற்றுமொரு காரணமாகும். ஏனைய எப்லிகேசன்களுடன் முரண்படும் மென்பொருள்களில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களும் அடங்கும்.
கணனி எதிர்பாராத விதமாக க்ரேஷ் ஆகும்போது கணனியில் இயக்கமே நின்றுவிடும். கணனியைப் பழுது பார்க்கு முன்னர் கணனி க்ரேஷ் ஆவதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் கொள்வது நன்மை பயக்கும். அதன் முதல் படியாக கணனியை ரீபூட் (reboot) செய்ய வேண் டும். கணனி முறையாக ரீபூட் ஆகுமானால் ரெஜிஸ்ட்ரியில் (Registry) ஏதோ சிக்கலிருப்பது உறுதியாகிறது.
உடனடியாக ரீபூட் ஆக வில்லையானால் கணனியை சேப் மொடில் (Safe Mode) ரீபூட் செய்து ஒரு ரெஜிஸ்ட் க்லீனர் கொண்டு ரெஜிஸ்ட் ரியைப் பழுது நீக்கிக் கொள்ள வேண்டும்.
விண்டோஸ் ஆரம்பிக்கு முன்னர் கீபோர்டில் எப். 8 விசையை அழுத்துவதன் மூலம் கணனியை எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும் என்ற மேனுவை வரவழைத்து சேப் மோடில் நுழையலாம்.
விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியிலிருக்கும் ஒவ்வொரு பைலும் கணனியிலுள்ள ஒவ்வொரு எப்லிகேசனுக்குமுரிய கட்டளைகளைக் கொண்டுள்ளன. அடுத்து என்ன செய்ய வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை ரெஜிஸ்ட்ரி பைல்களே கொண்டிருக்கும்.
இந்த ரெஜிஸ்ட்ரி பைல்கள் பழுதடையும் போது அல்லது இடம் மாறி விடும் போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற விவரம் தெரியாமல் கணனி தடுமாறுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் கணனி தன் கட்டுப்பாட்டை இழந்து இறுதியில் க்ரேஷ் ஆகிவிடுகிறது.
சில மென்பொருள்களைப் புதிதாக நிறுவும் போது கூட கணனி க்ரேஷ் ஆகலாம். அப்போது அந்த மென்பொருளை அகற்றி விடுவதே சிறந்த வழி.
இவ்வாறான சகந்தர்ப்பங்களில் முறையாக செயற்பட மறுக்கும் ஒரு எப்லிகேசளை டாஸ்க் மேனேஜரை (Task Manager) வரவழைப்பதன் மூலம் நிறுத்தி விடலாம். டாஸ்க் மேனேஜரை வரவழைக்க Ctrl+ Alt+ Delete விசைகளை ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும். செயற்பட மறுக்கும் எப்லிகேசன் பெயரை டாஸ்க் மேனேஜர் விண்டோவில் காண்பிக்கும். அதிலிருந்து உரிய எப்லிகேசனை தெரிவு செய்து End Task பட்டனில் க்ளிக் செய்வதன் மூலம் நிறுத்தி விடலாம்.
டாஸ்க் மெனேஜர் மூலமாகவும் உரிய எப்லிகேசனை நிறுத்த முடியாது போனால் டாஸ்க் மேனேஜர் திறந்திருக்கும் நிலையில் மறுபடியும் Ctrl + Alt+ Delete விசைகளை அழுத்துங்கள். கணனி ரீபூட் ஆக ஆரம்பிக்கும்.
ரீபூட் ஆக வில்லையெனின் கணனியில் உள்ள Reset பட்டனை அழுத்தி விடுங்கள். அப்படியும் ஒரு பட்டன் இல்லையென்றால் கவலை வேண்டாம். கணனியிலுளள பவர் பட்டனை ஐந்து வினாடிகள தொடர்ச்சியாக அழுத்திக் கொண்டே இருங்கள் கணனி முழுமையாக சட்டவுள் ஆகிவிடும்.
கணனி க்ரேஷ் ஆவதும் ப்ரீஷ் ஆவதும் தவிர்க்க முடியாததது. அதனால் கணனியில் முக்கியமான பைல்களை நகலெடுத்துப் பாதுகாக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க மறந்து விடாதீர்க்கள்
கணினி மேலாண்மை (Computer Management) என்பது என்ன?
Computer Management என்பது 'Services, Applications, Disk tools மற்றும் User and Group Administration' ஆகியவற்றை ஒரே குடையின் கொண்டுள்ள கருவியாகும்.
மை கம்ப்யூட்டரில் வலது கிளிக் செய்து இதில் 'Manage' கிளிக் செய்தால் 'Computer Management' என்ற விண்டோ திறக்கும். இந்த விண்டோவில் இடதுபுறமுள்ள pane ல் 'system Tools, Storage மற்றும் Services and Applications' ஆகிய பகுதிகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் கிளிக் செய்திட வலதுபுறமுள்ள pane ல் அதன் விபரங்கள் பட்டியலிடப்படும். இதில் ஒவ்வொன்றிலும் என்ன வசதிகள் தரப்பட்டிருக்கின்றன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
System Tools இந்த பகுதியில் கணினியின் கண்காணிப்பு, பயனாளர்கள் மற்றும் பயனாளர் குழுக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் சம்பந்தப்பட்ட அனைத்து கருவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் Shared Folders ஐ கிளிக் செய்தால் 'Shares, Sessions மற்றும் open files' ஆகிய மூன்றும் பட்டியலில் வரும். 'Shares' ஐ தேர்வு செய்தால் Network Shared Folders மற்றும் Windows Administrator ஆல் ரிமோட் அக்ஸஸ் இற்காக உருவாக்கப்பட்ட Shared Folders ஐ பார்க்கலாம். இதில் ஏதாவது குறிப்பிட்ட Folder இன் பகிர்வை நீக்க அந்த ஃபோல்டரில் வலது கிளிக் செய்து Sharing and Security யில் Share this Folder என்பதை uncheck செய்து விடுங்கள்.
Sessions என்பது தற்பொழுது உங்கள் கணினிக்கு தொடர்பிலிருக்கும் பயனாளர்கள் பற்றிய தகவல்கள், பயனாளர்களின் வகை, கணினியின் பெயர், திறந்துள்ள கோப்புகளின் எண்ணிக்கை, தொடர்பு கொண்ட நேரம் ஆகியவற்றை காண்பிக்கும். ஒருவேளை நீங்கள் எதிர்பாராத ஒரு பயனாளர் தொடர்பிலிருந்தால், அவர் இப்பொழுது உங்கள் கணினியில் எந்த ஃபோலடரிலிருந்து எந்த கோப்பை உபயோகித்துக் கொண்டிருக்கிறார் என்பதை 'Open Files' ஐ கிளிக் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒரு அட்மினிஸ்டிரேட்டராக நீங்கள் அதை முடக்கவும் செய்யலாம்.
Local Users and Groupsஉங்கள் கணினியில் உள்ள பயனாளர்கள் பற்றிய விவரங்களை அளிக்கும். புதிய பயனாளர் கணக்கு உருவாக்குவது, கணக்கை முடக்குவது, நீக்குவது, கடவுசொல்லை உருவாக்குவது, மாற்றுவது மற்றும் குறிப்பிட்ட பயனாளர் மறுமுறை லாகின் ஆகும்பொழுது கட்டாயமாக கடவுசொல்லை மாற்றும்படி கட்டளை கொடுப்பது என பல உபயோகமான கருவிகள் இருப்பதால் இது ஒன்றுக்க்கு மேற்பட்ட பயனர்களை கொண்ட கணினிக்கு மிகவும் உபயோகமானதாகும்.
Storageஇந்த பகுதியில் Disk Defragmenter மற்றும் Disk Management ஆகிய முக்கியமான கருவிகளும் Removable Storage கருவியும் உள்ளன.
இதில் Disk Defragmentation என்பது அனைவரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இருப்பதால் அதை இந்த பதிவில் தவிர்த்துவிடலாம்.
Disk Management ல் Partitions உருவாக்குவது மற்றும் Format மிகவும் எளிதாக செய்யலாம். இது நமது ஹார்ட் டிஸ்கில் உள்ள அனைத்து partitions மற்றும் சிடி/டிவிடி போன்ற அனைத்து வால்யூம்களையும் காண்பிக்கும். இந்த கருவியின் மூலம் Dos Command அல்லது Stratup Disk எதுவும் இல்லாமல் partition களை உருவாக்க முடியும். ட்ரைவ்களுக்கு தேவையான ட்ரைவ் லெட்டர்களையும் கொடுக்க முடியும்.
புதிய partition ஐ உருவாக்க, Unpartition Space ல் வலது கிளிக் செய்து New Partition ஐ கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான partition வகையை தேர்வு செய்து (Primary, Extended or Logical) அடுத்து வரும் திரையில் partition size, Volume Label மற்றும் partition வகை (FAT32/NTFS). Format வகையையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
எச்சரிக்கை
இந்த கருவியை உப்யோகிக்கும் பொழுது மிகவும் கவனமாகவும், வல்லுனர்களின் ஆலோசனையின்படியும் உபயோகிக்கவும்.
Services and Applications:-இந்த கருவியை உபயோகித்து ஒரு குறிப்பிட்ட Service ஐ Start, Restart, Stop மற்றும் Pause செய்யலாம்

கம்ப்யூட்டரில் பல வகையான ஹார்ட்வேர் சாதனங்கள்
ஹார்ட் டிஸ்க் மட்டும் நாம் அறிவோம். மதர் போர்டு என ஒன்று இருப்பதைப் பொதுவாகத் தெரிந்து கொண்டிருப்போம். இதனுடன் பல துணை சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கீ போர்டு, மவுஸ் போன்றவை பொதுவாக உள்ளவை. இவை எல்லாம் சரியாக உள்ளனவா? அல்லது பிரச்னையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனவா ? திடீரென நம் காலை வாரிவிடுமா? என்பதை எப்படி அறிந்து கொள்வது? அல்லது அவை இயங்க வேண்டிய வேகத்தில் அதற்கான தன்மையுடன் இயங்குகின்றனவா? என்று எப்படித் தெரிந்து கொள்வது? இதற்கு இணையம் ஒரு புரோகிராமினைத் தருகிறது.
PC Wizard என்ற இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கினால் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும். இதனை http://www.cpuid.com/pcwizard.php என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். உங்களுடைய கம்ப்யூட்டரின் பாகங்கள் மற்றும் அவற்றின் செயல் திறனை சிறிது ஆழமாகத் தெரிந்துகொள்ள இந்த புரோகிராம் பயன்படுகிறது. அவற்றின் செயல் திறன் பொதுவான இவற்றின் செயல் திறனுடன் ஒப்பிடுகையில் சரியாக உள்ளதா? என்பதனையும் அறியலாம். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன் இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரை முழுமையாக ஸ்கேன் செய்திடும். பின் ஒவ்வொரு சாதனமும் எந்நிலையில் இயங்குகின்றன என்று தொழில் நுட்ப ரீதியில் தகவல் தரப்படும். எந்த சாதனங்கள் சரியில்லை என்று கண்டறிந்து இவற்றை எல்லாம் மாற்றிவிடுங்கள் என்று அட்வைஸ் தரும். அப்படியா சேதி! என்று இவற்றை எல்லாம் பார்த்த பிறகு அங்குள்ள Benchmarks என்ற பட்டனை அழுத்தவும். இது கீழாக இடது புறம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சாதனங்களுக்கான செயல்திறன் சோதனையை மேற்கொண்டு அதன் பொதுவான தன்மையுடன் ஒப்பிட்டு காட்டும். இவை மட்டுமல்லாது உங்கள் கம்ப்யூட்டர் குறித்த இன்னும் பல தகவல்களையும் சோதனைகளையும் மேற்கொள்ளலாம். பிசி விஸார்ட் புரோகிராமினை இயக்கிப் பார்த்து ரசித்துப் பாருங்கள்
Safe Mode (Safe Boot) எனப்படும் பாதுகாப்புமுறை தொடக்கம் என்றால் என்ன?
Safe
Mode என்ற வார்த்தையை விண்டோஸ் கணினிகளை பயன்படுத்தும் நபர்கள் அனைவரும்
அறிந்திருப்பார்கள். Safe Mode என்றால் என்ன, எப்படி அதற்குள் நுழைவது,
அதில் என்ன செய்யலாம் போன்ற தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
Pull
oneself up by the bootstraps என்று முதலில் சொல்லப்பட்டு, பின்
bootstraps என்றும் பின் boot எனவும் மாறியது. நிறுத்தப்பட்ட கணினி
தொடங்கப்படுவதை cool boot எனவும், இயங்கிக் கொண்டிருக்கும் கணினியை மீளத்
தொடக்குவதை அதாவது reset செய்வதை warm boot (ctrl+alt+del) என்றும்
சொல்லப்படுகிறது. Cool Boot, Warm Boot தவிர Safe Boot, Clean Boot, multi
boot, dual boot, ready boot, fast boot என பலவகை உண்டு.
கணினியை பயன்படுத்தும் நமக்கு safe mode
என்பதை சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. எனினும் அதிகம் அறியாதவர்களுக்காக
சில தகவல்கள்.சில தவறுகள் (errors), தடைகள் (hangs,freezes) வரும் போது
நாம் உடனே செல்வது கணினி மீள்தொடக்கம் (Restart) அல்லது பாதுகாப்பான
தொடக்கம் (safe boot/safemode) தான். சேவ் மோட் என்று சொல்லும் போது கணினி
இயங்க முக்கியமாக தேவைப்படும் சில தொடக்க நிரலிகளுடனும் ட்ரைவர்களுடனும்
(startup program+device driver) கணினியை தொடக்குவது ஆகும். கணினியை மீள்
தொடக்கும் போது F8 என்பதை தொடர்ந்து அழுத்துவதால் வரும் option இல்
இவற்றைக் காணலாம். அல்லது கணினி தொடங்கியதும், மின்சார இணைப்பை துண்டித்து
பின் தொடக்கும் போது, சாதாரணமாக தொடக்குவதா சேவ் மோடா என பல கேள்விகளுடன்
ஒரு option வரும். இதைவிட இன்னொரு முறை start-run (search) இல் msconfig
என்பதை தட்டச்சிட்டு வரும் விண்டோவில் safemode ஐத் தெரிவு செய்து மீள்
தொடக்கலாம். Safe Mode இன் போது கீழ்க் கண்டவை செயலில் இருக்காது.
+autoexec.bat or config.sys files
+device drivers
+normal graphics device driver ற்குப் பதில் standard VGA graphics mod ஐப் பயன்படுத்தும்.
+standard system.ini file ற்குப் பதில் system.cb பயன்படுத்தும்.
+ 640 x 480 resolution உடன்16 நிறங்களைப்(colors) பயன்படுத்தி நான்கு மூலைகளிலும் Safe Mode எனக் காட்டும்.

இந்த safe mode இல் Safe Mode, Safe
Mode with Networking, Safe Mode with Command Prompt என மூன்று பிரிவுகள்
உண்டு. safe mode என்பது சாதாரணமாக( basic Safe Mode ) கணினியில் ஏற்படும்
தவறுகளைக் கண்டறியலாம். இரண்டாவது safe mode இல் சென்று இணையத்துடன்
தொடர்பை ஏற்படுத்தி தவறுகளைக் கண்டறியலாம். அதே சமயம் தேவையான ட்ரைவர்களை,
அப்டேட்களை, சில அழிந்து போன கோப்புகளை(dll files -மால்வெயர்,வைரஸ்
இருக்கக்கூடும் என்பதால் தரவிறக்குவதில் கவனம் தேவை) அங்கே இருந்து கொண்டே
தரவிறக்கி சரி செய்யவும். மூன்றாவது safe mode இல் இருந்து கொண்டே command
line இல் (DOS mode) சென்று தவறுகளை கண்டறியலாம். இதில் சில உத்தரவுகளை
(chkdsk,sfcscan,disk dir….இப்படி) கொடுத்து சரி செய்யவும் வழி செய்கிறது.
(மொபைல்களில் உள்ள safe mode இல் ஆரம்பத்தில் இருந்த நிலைக்கு கொண்டு
சென்று சரி செய்ய, தவறாக இணைக்கப்பட்ட மென்பொருள், apps களின் settings சரி
செய்து திருத்த, பாதுகாப்பிற்காக புதிய app ஐ இணைக்க என உதவுகிறது.)
இது தவிர சில மென்பொருட்கள்,பிரவுசர்களிலும் safe mode தவறுகளைக் கண்டறிந்து சரி செய்ய பயன்படுத்தப்படுகிறது.
இந்த
சமயத்தில் Boot பற்றி இன்னொரு தகவலையும் உங்களுக்காக தருகிறேன். விண்டோஸ்
கணினிகளில் சிலர் XP, Vista, Win7, Win8 இப்படி பல இயங்குதளங்களை நிறுவி,
multiboot/dual boot, முறையில் பயன்படுத்துவார்கள். புதியவர்கள் இப்படி
நிறுவும் போது சில பிரச்சனைகளை எதிர்நோக்குவார்கள். கணினியில் XP
கணினிகளில் வின் 7/8 ஐ அல்லது Wndows 7 கணினியில் XP ஐ நிறுவி விட்டு boot
செய்யும் போது ஏதாவது ஒரு இயங்குதளம் காணாமல் அல்லது boot ஆகாது
போய்விடும்.Windows 7 கணினியில் Old Windows என ஒரு தனியான போல்டரில்
சேமிக்கப்படுகிறது. இப்படி ஏன் வருகிறது?
விஸ்டாவிற்கு
முந்தைய அதாவது Windows NT ஐ அடிப்படையாகக் கொண்ட(Windows XP போன்ற)
இயங்குதளங்களில் NTLDR (New Technology Loader ) முறையில் boot
செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறைக்குப் பதிலாக Windows 7 இல் (Windows
Boot Manager + winload.exe முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. NTLDR ஐ
Windows 7 ஐ தொடக்க முடியாதது தான் காரணமாகும். இதற்கு நாமாக சிறிது
மாற்றம் கொண்டு வர வேண்டும்.
கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்
மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை
பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை
சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே
கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி
பார்ப்போம்.
Browser
ப்ரௌசர்
என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில்
நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு.
Antivirus
அடிக்கடி பென்டிரைவ்
அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ்
வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது
தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு.
File Compression Software
File
Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இதில்
winzip மற்றும் winrar போன்றவை கட்டண மென்பொருட்கள். இதை செய்ய சிறந்த இலவச
மென்பொருட்கள்.
Image/Graphics editor, paint program, and picture organizer
இமேஜ்
எடிட்டர் என்பது நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஒன்று. இதில் பெரும்பாலான
மென்பொருட்கள் நமக்கு இலவசமாக கிடைப்பது இல்லை. ஆனால் சில நமக்கு இலவசமாக
பல வசதிகளை தருகின்றன. அவற்றில் சிறந்தவை.
Multimedia
கணினியில்
ஓய்வு நேரங்களில் நாம் செய்வது பாடல்கள் கேட்பது மற்றும் படங்கள்
பார்ப்பது. அத்தோடு Video Editor, Video Converter போன்றவை தொழில்ரீதியாக
உள்ள Multimedia Tools. இதில் சிறந்த இலவச மென்பொருட்கள்.
- VLC media player
- KM Player
- Audacity – Free Audio Editor
- Avidemux – Free Video Editor
- DVD Video Soft
- Free Make Video Converter
Office Tools
MS Office க்கு மாற்றாக பல இலவச மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்தவை.
இது
கற்போம் தளத்தின் இருநூறாவது பதிவாகும். பலேபிரபுவாக 82 பதிவுகளும்,
கற்போம் ஆக 118 பதிவுகளும் எழுதி உள்ளோம். தொடர்ந்து ஆதரித்து வரும்
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
Delete செய்ய முடியாத Files & Folder-களை Delete செய்வது எப்படி?
சில
சமயங்களில் கணினியில் குறிப்பிட்ட Folder/File போன்றவற்றை டெலீட் செய்யும்
போது Access Denied என்று வரும். என்ன தான் பிரச்சினை என்று நமக்கு
தெரியாது. ஆனால் டெலீட் செய்யவும் இயலாது.அதன் காரணத்தையும் அவற்றை
உடனடியாக டெலீட் செய்ய என்ன வழி என்று பார்ப்போம்.
இதற்கு
காரணம் உங்கள் Folder/ File கணினியில் இயங்கி கொண்டிருப்பதே ஆகும். நாம்
அவற்றை க்ளோஸ் செய்து இருந்த போதிலும், இந்த பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.
பின்னணியில் அவை இயங்குவது காரணமாய் இருக்கலாம்.
படத்தில் உள்ளது போலத் தான் பெரும்பாலும் வரும். இது மாதிரி வரும் போது அவற்றை எப்படி டெலீட் செய்வது?
இதற்கு
உதவும் மென்பொருள் தான் “Unlocker”. இது டெலீட் மட்டும் இன்றி இன்னும்
Rename, Move போன்ற வசதிகளை செய்யும். இதன் மூலம் பின்னணியில் இயங்கி
கொண்டிருக்கும் File/Folder – இன் இயக்கத்தை நிறுத்தி அவற்றை Delete செய்ய
இயலும்.
இதை இப்போது உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
எதை Delete செய்ய முடியவில்லையோ, அந்த File/Folder மீது Right Click செய்து “Unlocker” என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது மேலே உள்ளது போல வரும் புதிய விண்டோ ஒன்றில் என்ன செய்ய
வேண்டும் என்று கேட்கும், அதில் “Kill Process” என்று கொடுத்தால் இயங்கி
கொண்டிருக்கும் அதன் செயல் நின்று விடும், இதன் மூலம் நீங்கள் Delete
செய்து விட முடியும். இல்லை என்றால் “Unlock All” என்பதை தெரிவு செய்து கூட
பின்னர் Delete செய்ய முடியும்.
No comments:
Post a Comment