Showing posts with label அறிவியல் ௨ண்மைகள். Show all posts
Showing posts with label அறிவியல் ௨ண்மைகள். Show all posts

Tuesday, August 18, 2015

எந்த திசையில் தலை வைத்து படுக்க கூடாது! காரணம் என்ன?


 வடக்கு திசை தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள் – காரணம் என்ன?இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும் அதன் இயல்பு பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.
காந்தம், உலோகப் (இரும்பு (Iron) செப்பு போன்ற) பொருட் களையும், காந்த தன்மை கொண்ட பொருட்களையும் தன் வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறு வயதில் பாடசாலைகளில் செய்த ஆராய்ச்சியின் (Experiments) மூலம் அறிந்து கொண்டவை களாகும்.
 
காந்ததிற்கு இரண்டு துருவங்கள் (Poles) உண்டு – வட துருவம் (North Pole) மற்றும் தென் துருவம் (South Pole). காந்தங்கள் இரண்டின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலகி கொள் ளும் (தள்ளும்)(Like Poles repel each other), எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் (இழுக்கும்) (Unlike poles attract each other) தன்மை களைக் கொண்டதாகும்.
 
எனவே, நாம் ஆய்வு கூடத்தில் (Laboratory) ஆய்வு முடிந்த பின் எதிர் துருவங்களை ஒன்றாக வைப்போம். அப்போது தான் அதன் காந்த ஈர்ப்பு தன்மை அப்படியே இருக்கும். ஒரே துருவங்களை ஒன்றாக வைத்தால் அதன் காந்த ஈர்ப்பு தன்மை சிதைந்து விடும். மேலும், இயல்பாக இருக்கும் காந்தம் (Natural Magnets) தன்னுடன் இருக்கும் இரும்பு துண்டுகளை சிறுசிறு காந்த துண்டுகளாக மாற்றும் தன்மை கொண் டது.
 
பூமி எப்படி காந்தம் ஆனது?
 
சூரியனின் வெப்பத்தால் பூமியின் கிழக்கு பகுதி சூடாகிறது. அப்போது பூமியின் மேற்கு பகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான மின்னோட்டம் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசைக்கு சூரியனால் உருவாக்கப் படுகிறது. எனவே மின்னோ ட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும் வடக்கு திசை, நேர் மின் னோட்டதையும் (Positive Current), இடதுபுறம் இருக்கும் தெற்கு திசை, எதிர் மின்னோட்டதையும் (Nega tive Current) பெறுகிறது. இதனால் பூமி ஒரு பெரிய காந்தம் ஆகிறது. அத்துடன் பூமி தன்னைத்தானே சுற்றுவதனாலும் காந்த சக்தியைப் பெறுகின்றது.
 
மனிதன் எப்படி காந்தப் பொருள் ஆனான்?
 
மனித உடலில் ஓடும் ரத்தம் வெள்ளை அணு, சிவப்பு அணு மற்றும் பல ரசாயன பொருட்களை கொண்டது. இதில் சிவப்பு அணுவில் இரும்பு சத்து உள்ளது. இந்த சிவப்பு அணுவின் காரணமாக மனிதன் பூமியின் ஈர்ப்பு தன்மைக்கு உள்ளாகிறான்.
 
எப்படி தூங்க வேண்டும்?
 
பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு. வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது. இந்த மின் னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கி ற்கும் செல்லும். அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.
 
நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத் துடன் இருக்கும். காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.
 
இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலை கள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.
 
எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.அதனால் போலும் இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பார்கள்.

பிரம்மிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!


மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தைவிட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இரு ந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த் திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னா ல் இருக்கும் ஆன்மிகம் பற்றி என க்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவி யல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப் பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில்கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியி னை (earth) கலசங்களுக்கு கொடுக்கி ன்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்) ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமா க கொட்டினார்கள். காரணத்தை தேடிப் போனால் ஆச்சரியமாக இருக்கிறது, “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிற து. அப்போது எந்த கல்லூ ரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.
இவ்வளவுதானா, இல்லை, பனி ரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் “கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிற து”, அதை இன்றைக்கு சம்பரதாய மாக மட்டுமே கடைபிடிக்கிறார்க ள். காரண த்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒரு வேளை தானிய ங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய் வது? இவ்வளவு உயரமான கோபுர த்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதை க்கலாமே!!!ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடிதாங்கி யோ அதுதான் முதலில் “எர்த்” ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அத ன் உயரத்தைப்பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கி கள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப் படு வார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பா ற்றப்படுவார்  கள்!!!!. சில கோயில் களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலா புறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக் கொண்டு நிற் கிறது!!! இது ஒரு தோராயமான கணக்குதான், இதை  உயரமான கோபுர ங்கள், இதைவிட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!அதெப்படி என்றுகேட்கிறவர்கள் படத்தைப்பார்க்கவும். இதை எல் லாம் பார்க்க போனால் “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண் டாம்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது. சும்மாவா சொன்னாக பெரியவங்க!!!