ல் எனும் பயன்பாடானது தரவுகளை கையாளச்செய்து நாம் விரும்பும் வகையில் அதன் வெளியீடுகளை வழங்குவதில் மிகச்சிறந்த கருவியாக உள்ளது. இவ்வாறான தரவுகளை ஒரு எக்செல்தாளிற்குள் எவ்வாறு உள்ளீடு செய்வது என இப்போதுகாண்போம்
1 எக்செல்தாளிற்குள் தரவுகளை உள்ளீடு செய்வதற்கு எப்போதும் படிவங்களையே பயன்படுத்திகொள்க இதற்காக விரைவு அனுகுதல் கருவிபட்டையை(Quick Access Toolbar) பயன்படுத்திகொள்க முதலில் Quick Access Toolbar என்பதில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்Customize quick Access Toolbar என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Excel Options எனும் உரையாடல்பெட்டியில்All Commands எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் அதன்கீழ் விரியும் பட்டியில் Form என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு இந்த படிவபகுதியில்add எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக உடன் Data Forms எனும்
உருவபொத்தான் ஆனது இந்த விரைவு அனுகுதல் கருவிபட்டையில் அமர்ந்துவிடும்
அதன்பின்னர் தரவுகளை உள்ளீடு செய்வதற்கான நெடுவரிசை கிடைவரிசை கலண்களை இந்த
விரைவு அனுகுதல் கருவிகளின்பட்டையிலுள்ளநாம் உருவாக்கிய Data Forms எனும்
உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மேல்மீ்ட்பு படிவமாக திரையில்
மிதக்கும் அதில் நாம் விரும்பியதரவுகளை உள்ளீடு செய்துகொண்டு உள்ளீடட்டு
விசையை அழுத்துக
2 இவ்வாறு
எக்செல் தாளில் பின்ன எண்களை உள்ளீடு செய்திடும்போது புள்ளிக்கு பிறகு
குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் எண்கள் இருக்குமாறு செய்திடுவதற்காக
அதாவது மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடு செய்திடும்போது அவை புள்ளிக்கு
பிறகு இரண்டு மட்டும் இருக்குவேண்டும் எனவிரும்புவோம் இந்நிலையில்
திரையின்மேலே கட்டளைபட்டையில் File => Options=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்திடுக பின்னர்விரியும் Excel Options எனும் உரையாடல்பெட்டியில்Advancedஎனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அதன் பின்னர் அதன்கீழ் விரியும் வாய்ப்புகளில் “Automatically Insert a decimal point” என்பதை
தெரிவுசெய்து கொண்டு அதன்அருகில் புள்ளிக்கு பிறகு இருக்கவேண்டிய எண்கள்
இரண்டு என தெரிவுசெய்துகொள்க தரவுகளை உள்ளீடு செய்திடும் பணிமுடிவடைந்ததும்
இந்த வாய்பினை தெரிவுசெய்யாது விட்டிடலாம்
3 எண்களை குறிப்பிடும்போது 7th,, 2nd, 3rd 1stஎன்றவாறு குறிப்பிடுவதற்காக =A1&IF(OR(VALUE(RIGHT(A1,2))={11,12,13}),”th”,IF(OR(VALUE(RIGHT(A1))={1,2,3}),CHOOSE(RIGHT(A1),”st”,”nd”,”rd”),”th”))
என்றவாறு வாய்ப்பாடுகளை அமைத்துகொள்க
4 தற்போது நாம் பணிபரிந்துகொண்டிருக்கும் கலண்களுக்கு மேல் உள்ள கலணை அல்லது நெடுவரிசையை நகலெடுத்து ஒட்டிடவிரும்பும்போது Ctrl + D. ஆகிய
விசைகளை சேர்த்து அழுத்தினால் அவைகளில் உள்ள தரவுகள் மட்டுமல்லாது
வாய்ப்பாடுகளும் வடிவமைப்புகளும் சேர்த்து நகலெடுத்துகொள்ளும் பிறகு
தேவையான இடத்தில் இதனை ஒட்டிகொள்க
5 எக்செல்தாளில்
தரவுகளை உள்ளீடு செய்திடும்போது இந்த தரவுகள் எந்த நாளில் உள்ளீடு
செய்யப்டடது என அறிந்துகொள்வதற்காக நடப்பு நாளினை உள்ளீடு செய்திடவிழைவோம்
அப்போது Ctrl + ; ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக நேரத்தினை உள்ளீடு செய்திட Ctrl + Shift + :ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக. நாம் எக்செல்தாளினை பயன்படுத்தும் போதெல்லாம் நாளும் நேரமும் பதிவு ஆவதற்காக TODAY(), NOW() ஆகிய இரு செயலியை பயன்படுத்தி கொள்க
6 ஒன்றிற்கு மேற்பட்ட கலண்களை தெரிவுசெய்திடும்போது Ctrl + Enter ஆகிய இரு விசைகளை சேர்த்து அழுத்துக உடன்
செயலில் இருக்கும் கலண்களின் உள்ளடக்கமானது அதாவது அதிலுள்ள வாய்ப்பாடானது
மற்ற கலண்களிலும் உள்ளிணைக்கப்பட்டு தெரிவுசெய்திடுவதற்காக தயாராகிவிடும்
7 நெடுவரிசைகளில் ஒரேமாதிரியாகஎண்களை அமைத்திடுவதற்காக முதலிரு கலண்களில் மட்டும் தரவுகளை உள்ளீடு செய்துகொண்டு Alt + Down ஆகிய இரு விசைகளை சேர்த்து அழுத்துக
8 நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் பணிக்கோப்பில் ஒரு பணித்தாளிலிருந்து மற்றொரு பணித்தாளிற்க விரைவாக மாறிச்செல்வதற்காக Ctrl + Pg Up/Pg Dn ஆகிய இரு விசைகளை சேர்த்து அழுத்துக
மேலும் எக்செல்தொடர்பான ஆலோசனைக்கு http:/easyexcell.org/ எனும் தளத்திற்கு செல்க
லேப்டாப், டேப்ளெட்,ஐபேடு ஆகியவற்றிற்கிடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
ஐபேடில் இணையத்தில் உலாவரலாம் மின்னஞ்சலை கையாளலாம்,விளையாட்டுகளை விளையாடலாம் இசைகளை கேட்டு மகிழலாம் மின்புத்தகங்களை படித்திடலாம்
டேப்ளெட்களிலும் இவ்வாறே செய்திடலாம்.ஆயினும் டேப்ளெட்களில் கையடக்க பயன்பாடுகளை மட்டுமே பயன்படுத்திடமுடியும்
ஆனால் லேப்டாப்பில் வழக்கமான மேஜைக்கணியில் பயன்படுத்தபடும் Microsoft Office, Photoshop , complex video editing என்பனபோன்ற அனைத்து பயன்பாடுகளையும் செயல்படுத்தி பயன்பெறமுடியும்
விண்டோ டேப்ளெட்டில் மட்டும் Surface Pro 4 என்பன போன்ற வழக்கமான பயன்பாடுகளை லேப்டாப்போன்று செயல்படச்செய்து பயன்பெறமுடியும்
விண்டோ பயன்பாடுகளை விண்டோ டேப்ளெட்டிலும் லேப்டாப்பிலும் மேஜைக்கணினிபோன்ற செயல்படசெய்து பயன்பெறமுடியும்
அதுமட்டுமல்லாது ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் ஆகியவற்றின் பயன்பாடுகளை லேப்டாப்பில் செயல்படுத்தி பயன்பெறமுடியும்
வழக்கமான டேப்ளெட்,ஐபேடு ஆகியவற்றில் யூஎஸ்பி வாயில்கள் இல்லை அதனால் சுட்டியை அல்லது மற்ற கையடக்க நினைவகத்தை இவைகளில் இணைத்து பயன்படுத்திடமுடியாது
ஆனால் லேப்டாப்பில் இவைகளை இணைத்து வழக்கமான மேஜைகணினி போன்ற ப.யன்படுத்தி கொள்ளமுடியும்
மேலும் டேப்ளெட்,ஐபேடு ஆகியவற்றில் ஒரேசீரான இணைய இணைப்பினை மட்டுமே கையாளமுடியும்
மிகைவேக இணைய இணைப்பு எனில் லேப்டாப்தான் சிறந்ததாகும்
No comments:
Post a Comment