Friday, March 25, 2016

இல்லம் வலைபூ ஆசிரியரின் தன்விவரக்குறிப்பு இயக்கமுறைமை ஆண்ட்ராய்டின் 6.0 பதிப்பில் என்னென்ன வசதிவாய்ப்புகள் உள்ளன

6
செல்லிடத்து பேசியின் கட்டற்ற இயக்கமுறைமையான ஆண்ட்ராய்டின்1.6 பதிப்பானது டூநட் என்றபெயரில் முதன்முதலில் வெளியிடப்பட்டது தற்போது இதனுடைய பதிப்பு6.0ஆனது மார்ஷ் மால்லோவ் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது இது ஏறத்தாழ முந்தைய பதிப்பு5.0 ஆன லாலிபாப் வசதிகள் அனைத்தையும் கொண்டதுமட்டுமல்லாமல் பின்வரும் புதிய வசதிகளும் தன்னகத்தே கொண்டுள்ளது இதிலுள்ள Now on Topஎனும் வசதி பயனாளருக்கு தேவையான விவரங்களை வழங்குகின்றது More contextually aware androidஎனும் வசதியானது தான்பயன்படுத்திடும் பயன்பாட்டிலிருந்து அல்லது இணையதள பக்கத்திலிருந்தும்எளிதாக வெளியேற உதவுகின்றது , Improved voice API எனும் வசதி குரலொலிமூலம் தேவையான இணைய பக்கத்தை அனுகஉதவுகின்றது, Dozeஎனும்பயன்படாது இருக்கும் பயன்பாடுகளில் சாதனத்தின்மின்சாரத்தை வீணாக்காமல் சேமித்திட பயன்படுகின்றது, App standby feature எனும் வசதி தயார்நிலையிலுள்ள பயன்பாடுகள் மின்கலனின் மின்சாரத்தை சேமி்க்கசெய்கின்றது, Connectivity for work எனும் வசதி சொந்த நிறுவன மின்னஞ்சல் முகவரியை நம்முடைய கணக்கு துவங்குவதற்கு வழங்க அனுமதிக்கின்றது Andriod usability and produtivity and system usability எனும் வசதிகுறைந்த நினைவகத்தில் அதிக திறனுடன் செயல்பட அனுமதிக்கின்றது Do Not Disturb mode எனும் வசதி நாம் வேறுமுக்கிய பணிகளில் இருக்கும்போது நம்மை தொந்திரவு செய்யாதீர்கள் என்ற நிலையை கடைபிடிக்கசெய்கின்றது வேறு எந்த மாறுதலும் செய்திடாமல் பாதுகாப்பாக சாதனங்கள் இயங்க இதிலுள்ள புதிய வசதிகள் அனுமதிக்கின்றன. தேவைப்பட்டால் மட்டும் கூகுள்ப்ளே ஸ்டோரில் அனுமதி கோருகின்றது அனைவரும் வருக உங்களின் செல்லிடத்து பேசிகளில் இந்த புதிய மார்ஷ்மால்லோவ் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள ஆண்ட்ராய்டின் 6.0 பதிப்பினை பதிவிறக்கம் செய்து பயன்பெறுக

No comments: