குறை சொல்லும் குணத்தைத் தவிர்த்து வாழ்க்கையில் வெற்றி
பெறுவது எப்படி?
குறை சொல்லும் குணத்தைத் தவிர்ப்ப து எப்படி
சிலர்
எடுத்ததுக்கெல்லாம் எப்போதும் குறை சொல்வார்கள். இதுபோன்ற குண முடையவர்கள்
நிச்சயம் வாழ்க்கையில் பெரிய முன் னேற்றம் காண முடியாது. குறை சொல்வதைத்
தவிர்ப்பதே ஒரு பாசிட்டிவ்வான சூழலை உருவாக்கும்’ என்றுசொல்லி,
குறைசொல்லாமல் இருப்பதன் பலாபலன்களை வி ளக்கி, குறைசொல்லும் குணத்தைத்
தவிர்த்து வாழ்க்கையில்
‘வாழ்க்கையை
அனுபவித்து வாழ்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. உங் களுக்கு ஒன்று
பிடிக்கவில்லை எனில், அதனை மாற்று ங்கள். மாற்ற முடிய வில்லைஎன்றால்
பிடிக்காததைப் பிடிக் கிற மாதிரி நீங்கள் மாறிக்கொள்ளுங் கள்.
அதை விட்டுவிட்டு, பிடிக்காத மற்றும் மாற்றமுடியாத விஷயத்தை
ப்பற்றி ஒருபோதும் குறை சொல்லா தீர்கள்’ என்ற அடிப்படை உண்மை யை மையமாக வைத்து எழுதப்பட்ட துதான் இந்தப் புத்தகம்.
குறைசொல்லியே
வாழ்வதினால் நமக்கு என்ன இழப்பு ஏற்படுகிறது எ ன்கிற கேள்விக்கு அழகான
விளக்க த்தைத் தருகிறார் ஆசிரியர். ”குறை சொல்வதால் நெகட்டிவ் எண்ணங்கள்
நம்மைச் சுற்றி நீக்க மற நி றைந்துகிடக்கிறது. ஒருமுறை பத்திரிகையாளர்கள்
நடுவே, பாசிட்
டிவாகச் செயல்படுவதன் அவசியம் குறித்து பேசினாராம் ஆசிரியர்.
‘பாசிட்டிவ்வாக
நினையுங்கள், பேசு ங்கள் என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், நாங்கள் நல்ல
செய்தியை வெளியிடும் நாளன்று நடக்கும் விற் பனையைவிட பிரச்னை, குழப்பம்,
சீர் கேடு என்று செய்திபோடும் நாட்களி ல் தான் எங்களுக்கு அதிக
செய்தித்தாள் விற்கிறது’ என்றாராம் ஒரு
நாளிதழின் அதிபர்.
ஆசிரியர்
அவரிடம், ”மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் நெகட்டிவ்
எண்ணங்களினாலேயே கெட்ட செய்தி தலைப்பாக வரும் நாளில் செய்தித் தாள் கள்
அதிகம் விற்பனையாகிறது’ என்றா ராம்.
மக்கள்
மனதில் இருக்கும் பயமே கெட்ட செய்திகளை தெரிந்துகொள்ள தீராத
ஆவலைத்தருகிறது என்கிறார் ஆசிரியர் . அமெரிக்க தொலைக்காட்சிகளில் வரு ம்
24மணி நேர செய்தி சேனல்களில் பல வற்றையும் மேற்கோள் காட்டும் ஆசிரி யர்,
அவற்றை செய்தி
என்றே
சொல்ல முடியாது. கெட்டசெய்தி என்று வேண் டுமென்றால் சொல்லலாம் என்கிறார்.
அந்த அளவுக்கு கொலை, கொள்ளை, விபத்து எனக் கெட்டவைகளின் தொகு ப்பாக அது
இருக்கிறது.
முப்பது
நிமிட செய்தித் தொகுப்பில் 29 நிமிடம் கெட்டசெய்திகளும் ஒரேயொ ரு
நிமிடத்துக்கு மட்டும் ஏதோ ஒரு நல் ல செய்தி தப்பித்தவறிவருகிறது.
இதைச்செய்தி என்று சொல்வதை விட கெட்டச் செய்தி என்று சொல்வதுதானே சரி என்று
கிண்டலடிக் கிறார் ஆசிரி யர்.
”மூளை என்பது ஒருதோட்டம் போன்றது. அதைச்செப்பனிட்டு நல்
ல
பல வாசமலர்களை அதில் பயிர் செய்து சந்தோஷமாக வாழவும் செய்யலாம். கரடு
முரடாக முட்செடிகளை வ ளர்த்துவிட்டு வருத்தத்துட னும் வாழலாம். எது உங்கள்
சாய்ஸ்?” என்றுகேட்கிறார்.
நாள்முழுக்க கெட்டதைப் பார்த்துக் கொண்டும், கெட் டதைக் கேட்டுக்கொண்டும் இருந்தால் எங்கே உங்கள் மூளையும் மனதும் நல்லதை நினைக்கு
ம்? என்றும் கேட்கிறார்.
”நம்
மனதிலும் மூளையிலும் பயிரிடப் படும் கெட்ட எண்ணங்கள் எப்படி உரு வாகிறது
என்று தெரியுமா? குறை சொ ல்வதனாலேயேதான். எண்ணம்போல் வாழ்வு என்கிறீர்கள்.
எப்போதும்கு றையைச் சொல்லிக்கொண்டும் நி னைத்துக்கொண்டும் இருந்தால் உங்க
ள் வாழ்வில் எங்கே நிறைவு வரும்?” என்று கேட்கிறார் ஆசிரியர்.
”குறை
சொல்லுதல் என்பது நம்முடைய ஃபோக ஸை பிரச்னையின்மீது நிறுத்திவைக்கிறதே
தவிர, அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழி முறைகளை கண்டறிய வைப்பதில்லை.
குறை சொல்லும் பழக்கம் உடல்நலத்தையும் பாதிக்கு ம். உங்கள் வாய்க்கு
ள்
செல்லும் உ ணவு உங்கள் உடலின் தன்மையைத் தீர்மானிக்கிறது. உங்கள்
வாயிலிருந் து வரும் குறை சொல்லும் வார்த்தை கள் உங்களைச் சுற்றி
யிருக்கும் சூழ லை நிர்ணயிக்கிறது” என்கிறார்.
நாம்
ஏன் குறை சொல்கிறோம் என்ப தற்கு பின்வருவனவற்றையே காரண மாகச் சொல்கிறார்
ஆசிரியர். ”மற்றவர்கள் கவனம் நம் மீது திரும் ப, நம்மிடம் இருக்கும்
பொறுப்பை கைகழுவிவிட, பொறாமை கொ
ள்பவர்களின்
காலை வாரிவிட, பவர்ஃபுல்லாக மாற, நம் முடைய திறமையற்ற செயல்களுக்கு சப்
பைக்கட்டுக் கட்ட என்பது போன்ற சூழல்களிலேயே நாம் குறை சொ ல்ல
ஆரம்பிக்கிறோம்” என்கிறார் ஆசிரியர்.
நாம் அனைவருமே ஒரு விஷயம்
இல்லாவிட்டால்
மற்றொன்றில் குறை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோ ம். அதனால் இந்தப்
புத்தகத்தை ஒரு முறை வாசித்து, குறைசொல்வதால் வரும் நெகட்டிவ் எண்ணங்களை
மாற் றி பாசிட்டிவ்வான வாழ்க்கைப் பாதை க்கு செல்ல முயலலாம்.
வில் பொவென் எழுதிய ‘எ கம்ப்ளைன்ட் ஃப்ரீ வேர்ல்டு’ என்கிற புத்தகத்திலிருந்து . .
No comments:
Post a Comment