Sunday, November 27, 2016

என்னாது 2 விதமான ரூ.500 நோட்டா? அதிர்ச்சி தகவல்

பெங்களூரு: புதிதாக வெளியிடப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்ததால் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, புதிதாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது.
2000 ரூபாய் நோட்டு லாட்டரி சீட்டு போல இருக்கு... என்னா கலரு... பண நோட்டு போலவே இல்லையே என பல தரப்பில் இருந்து பல வகையான கருத்துகள் வந்து விழுந்தன.

ஆனால், மக்கள் கையில் புழக்கத்துக்கு வந்து ஒரு சில நாட்களே ஆன 500 ரூபாய் நோட்டுகளில் ஒரு சில குளறுபடிகள் இருப்பது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

அதாவது, இரண்டு விதமான ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. ஒரு 500 ரூபாய் நோட்டுக்கும், மற்றொரு 500 ரூபாய் நோட்டுக்கும் ஒன்றல்ல... இரண்டல்ல... குறைந்தபட்சம் 9 வித்தியாசங்கள் இருக்கிறதாம்.

ரூபாய் நோட்டின் ஓரங்களில் உள்ள பார்டரின் அளவு, ரூபாய் நோட்டின் நிறம், தேசியச் சின்னம் மற்றும் காந்தியின் புகைப்படம் ஷேட் அடிப்பது, 

ரூபாய் நோட்டுக்கு இடையே இருக்கும் இழைக்கும் அருகில் இருக்கும் வார்த்தைகளுக்கும் இடையேயான இடைவெளி என கன்னாபின்னாவென வேறுபடுகிறது.

இது குறித்து ஆர்பிஐயிடம் கேட்டால், ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் செய்யும் போது அதிக அளவில் பணத்தை அச்சடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் ஏற்பட்ட தவறே இதற்குக் காரணம். புதிதாக அச்சடித்த 500 ரூபாய் நோட்டுகளை மக்கள் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம்.

யாரேனும் அந்த ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தால், அதனை ஆர்பிஐ வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ஆர்பிஐ செய்தித் தொடர்பாளர் அல்பனா கிலாவ்லா தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருக்கு இப்படி ஒரு அறிவா ? அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவரின் தினசரி வாழ்க்கை முறை வெளியாக பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன்னர் 23 வயதான வாலிபர் ஒருவர் மென்பொருள் பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.

சொந்த ஊரை விட்ட வந்துள்ளதால் தங்குவதற்கு குடியிருப்பு ஒன்றை தேடியுள்ளார். ஆனால், சான் பிரான்சிஸ்கோ நகரில் சிறிய அறையாக இருந்தாலும் கூட அதற்கு அதிகளவில் டொலர் வசூலிப்பதை பார்த்த அவர் வாடகைக்கு வீடு பார்க்கும் எண்ணத்தை கைவிட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தில் பணியில் சேரும் ஊழியர்களுக்கு அந்நிறுவனம் சில சலுகைகள் வழங்கும். அதே போல், பிராண்டன் என்ற பெயருடைய அந்த ஊழியர் தங்குவதற்கு இரண்டு படுக்கையறை வசதியுள்ள வீட்டை ஏற்பாடு செய்துள்ளது.

4 பேர் தங்க கூடிய இந்த வீட்டிற்கு மாதம் 2,000 டொலர் வரை வாடகை தரவேண்டும். ஆனால், இந்த வசதியையும் பிராண்டன் மறுத்துள்ளார்.

பின்னர், இதே நகரிலேயே தங்குவதற்கு இடம் வேண்டும் என யோசனை செய்த அவர் 2006-ம் ஆண்டு விற்பனை ஆன ஒரு பழைய வேன் வாகனத்தை 10,000 டொலருக்கு விலைக்கு வாங்கியுள்ளார்.
இந்த வாகனத்தை ஒரு சிறிய குடியிருப்பாக மாற்றிய பிராண்டன் அதனை கூகுள் நிறுவனத்தை சேர்ந்த வாகனங்கள் நிறுத்தும் இடத்தில்(Parking area) நிலையாக நிறுத்தி விட்டு அதிலேயே வசிக்க தொடங்கியுள்ளார்.

நிறுவனத்திற்கு வெளியே வாகனம் நிற்பதால் அவரால் நேரம் தவறாமல் அலுவலகம் செல்ல முடிகிறது. இரவில் தூங்கும் நேரத்தை மட்டுமே வேனில் செலவிடுகிறார்.
பினனர், காலையில் எழுந்து கூகுள் நிறுவன வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் குளித்து விடுகிறார். காலை, மதிய மற்றும் இரவு உணவுகளை கூகுள் நிறுவனம் வழங்குவதால் அவருக்கு சாப்பிடும் செலவுகளும் மிச்சமாகியுள்ளது.

இவ்வாறு கூகுள் நிறுவனத்தின் பார்கிங்கில் தங்கி வருவதால் அவருடைய லட்சக்கணக்கான ஊதியத்தில் 90 சதவிகிதம் வரை மிச்சப்படுத்தி அதனை எதிர்கால திட்டத்திற்கு சேமித்து வருகிறார்.