1) நியோபக்ஸ்
அ) அறிமுகம்நியோபக்ஸ்
இணையத்தில் பணம் சம்பாதிக்க 100/100 மிகச்சரியான வெப்சைட். இந்த
வெப்சைட்டை பயன்படுத்தி பல மக்கள் மாதம் 50,000 ரூபாய்க்கு மேல்
சம்பாதிக்கிறார்கள். "அப்படி என்றால் நாமும் இந்த
வெப்சைட்டில் குதித்து பணத்தை அள்ளிவிட வேண்டியதுதான்!" என நீங்கள்
நினைத்தால் அது தவறு. முயற்சி இல்லாமல் அத்தொகையை நம்மால் எட்டவே முடியாது.
ஏற்கனவே சொன்னது போல இந்த வெப்சைட்டில் நீங்கள் கால் பதித்துவிட்டால் அது
தவறாமல் கனி கொடுக்கின்ற ஒரு மரத்தை போல ஆகிவிடும். கால்பதிப்பது தான் சாமர்த்தியம். அதற்கு உங்களுக்கு கொஞ்சம் பொறுமை மட்டுமே தேவை. எடுத்தவுடன்
இணையத்தில் வருமானத்தை அள்ளுவது என்பது இயலாத காரியம். இன்று எத்தனையோ
மக்கள் அலுவலகத்திற்கு சென்று படாதபாடுபட்டு உழைக்கிறார்கள், அவர்களுக்கு
எல்லாம் கொட்டிக் கொடுக்கின்ற ஆன்லைன் வேலை உடனே கிடைத்தால் அவர்கள் ஒரு
கணினியை மட்டும் வாங்கிப்போட்டு வீட்டில் இருந்தபடியே எளிமையாக
சம்பாதித்துவிட மாட்டார்களா? எனவே எடுத்தவுடன் வென்றுவிடலாம் என்ற
நினைப்பு இருந்தால் தயவுசெய்து விட்டுவிடுங்கள்....
நியோபக்ஸில் எப்படி மக்கள் அவ்வளவு தொகையை எட்டுகிறார்கள் எனக் காணலாம். இந்த வெப்சைட்டில் இணைந்து பணிபுரிய ஒரு பைசாவும் தேவையில்லை. வெற்றி
பெற தேவையானது பொறுமை, பொறுமை, பொறுமை மட்டும்தான். இப்பொழுது உங்களுக்கு
வேண்டியது ஒரு நியோபக்ஸ் அக்கௌண்ட். கீழுள்ள முகவரியை பயன்படுத்தி
இணையலாம்.
அக்கௌன்ட்
பெறும் போது, 'Paypal/Payza Email' என்ற கட்டத்தில் உங்களது பேசா ஈமெயில்
முகவரியை டைப் செய்யவும். எல்லாம் முடிந்த பின் படிவத்தை சமர்ப்பியுங்கள்.
உடனே 'Verification' என்ற பக்கம் தோன்றும். இந்த பக்கத்தை மூடிவிடாதீர்கள்
(தவறுதலாக பேஜை மூடி இருந்தால் இன்னொரு முறை கணக்குப்பதிவு செய்யலாம்).
உலாவியில் இன்னொரு டேப் ஓபன் செய்து உங்களது மின்னஞ்சலை லாகின்
செய்யுங்கள். நியோபக்ஸில் இருந்து உங்களுக்கு ஒரு ஈமெயில்
அனுப்பப்பட்டிருக்கும். அந்த ஈமெயிலைத் திறந்து அதில் உள்ள Verification
Code-ஐ காப்பி செய்யுங்கள். அதை அப்படியே 'Verification' பக்கத்தில் உள்ள
கட்டத்தில் பேஸ்ட் செய்து சமர்ப்பியுங்கள், உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட்
ரெடி.
ஆ) முதல் 20 நாட்கள்இனிதான் உங்களுக்கு முக்கியமான செய்திகள். உங்களது
நியோபக்ஸ் அக்கௌன்ட்டை லாகின் செய்து, 'View Advertisements' என்ற
தொடுப்பை கிளிக் செய்யுங்கள். சிவப்பு, பச்சை, மஞ்சள் என நிறைய கட்டங்கள்
தோன்றும். அவற்றை கிளிக் செய்து விளம்பரங்களை காண ஆரம்பியுங்கள். நீங்கள்
விளம்பரங்களை காணக்காண அதற்கான தொகை உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட்டில்
சேர்ந்து கொண்டு இருக்கும். ஒவ்வொரு விளம்பரத்திற்கும் $0.001 முதல் $0.02
வரை கிடைக்கும். (அதாவது இந்திய மதிப்பில் 5 பைசா முதல் 1 ரூபாய் வரை).
"இதென்ன! ஐந்தைந்து பைசாவாக எப்படி சம்பாதிப்பது? இதற்கு போய் நியோபக்ஸில்
நான் வேலை செய்யனுமா?" என நினைத்து நியோபக்ஸை விட்டு சில நாட்களில்
வெளியேறியவர்கள் ஏராளம்!
பொறுமைதான் வெற்றியைத் தரும். கணக்கு தொடங்கி முதல் 20 நாட்கள் நீங்கள் பற்கள் பிடுங்கப்பட்ட பாம்பு மாதிரிதான் :-) ஐந்தைந்து
பைசாவாக (0.001 டாலர்) சம்பாதிப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது. ஒரு
குறிப்பிட்ட நேரத்தை முடிவு செய்து கொள்ளுங்கள். அதாவது இரவு 9 மணி என
வைத்து கொள்வோம் (அது உங்கள் இஷ்டம்). 20 நாட்கள் விடாமல் இரவு 9 மணிக்கு
நியோபக்ஸை லாகின் செய்து விளம்பரங்களை பார்வையிடுங்கள். இதனால் தினமும் ஒரு
ஐந்து நிமிடம் செலவாகும் (இச்செயல் வருங்காலத்தில் உங்களுக்கு பெரிதும்
உதவும். கவலை வேண்டாம்...) நியோபக்ஸ் அதிகமான விளம்பரங்களை எல்லாம் தராது -
சுமாராக ஒரு நாளைக்கு 50 விளம்பரங்கள் வரை தரும். இப்போது நீங்கள்
குறைந்தது முப்பது விளம்பரங்களை 20 நாட்கள் விடாமல் பார்க்கிறீர்கள்...
அப்படியெனில்,
ஒரு நாளைக்கு 30 X 0.001 = 0.03$ (1.50 ரூபாய்)
20 நாட்களுக்கு 0.03 X 20 = 0.60$ (30 ரூபாய்)
20
நாட்கள் கழித்து உங்கள் Main Balance 0.6$-ஆக இருக்கும். Main Balance
என்றால் நீங்கள் சம்பாதித்த தொகை. இத்தொகை 2 டாலரை எட்டியவுடன் உங்கள் பேசா
கணக்கிற்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் 0.6$ சேர்ந்தவுடனேயே கீழே
சொல்லப்பட்ட படி செலவழிக்க வேண்டும். 0.6 டாலர் சம்பாதிப்பதற்கே இருபது
நாட்கள் தேவைப்படுகிறது. 2$ சம்பாதிப்பதற்கு கிட்டதட்ட 2 மாதத்திற்கு மேல்
ஆகிவிடும். தொடர்ந்து 70 நாட்கள் சம்பிரதாயமாக 5 நிமிடத்தை செலவிட யாருக்கு
தான் மனம் வரும்? நாம் அறுத்துப்போய் சென்றுவிட வேண்டும் என்று தான்
நியோபக்ஸ் எதிர்பார்க்கிறது. நாம் கொஞ்சம் எதிர்த்து நின்றோம் என்றால் நியோபக்ஸ் நமக்கு ஊதியங்களை கொட்ட வேண்டும். அதற்காகத்தான் நம் பொறுமையை டெஸ்ட் செய்கிறது. எனவே 2 டாலருக்கு ஆசைப்பட்டு நியோபக்ஸை விட்டுவிடாதீர்கள்.
2
டாலருக்கு ஆசைபடும் மக்கள் தான் பொறுமை இழந்து போய் விடுவார்கள். இதில்
என்ன ஒரு பரிதாபம் என்றால் அவர்களுக்கு நியோபக்ஸை பயன்படுத்தி 1000
டாலருக்கு மேலாக சம்பாதிக்கலாம் என்பதே முதலில் தெரியாது. "நியோபக்ஸ்
என்றால் ஒரு வெப்சைட், அதில் விளம்பரங்களைக் கண்டால் சில்லறையாக சேர்த்து
சம்பாதிக்கலாம்" என்று நினைத்துக் கொண்டு வருவார்கள். 2$
சம்பாதிப்பதற்குள்ளாகவே திக்குமுக்காடி போய்விடும். எனவே 'சீ போ' என தூக்கி
எறிந்துவிட்டு போய் விடுவார்கள். இதன் காரணம் என்ன? - நிறைய பேர்
இணையத்தில் நியோபக்ஸை அறிமுகம் செய்யும் போது இந்த செய்திகளை எல்லாம்
விவரித்து சொல்வதில்லை. அதனால் தான் அவர்கள் இவ்வாறு எதையாவது நினைத்துக்
கொண்டு வந்து சலித்துபோய் சென்று விடுகிறார்கள். உங்களுக்கு அந்த கவலை வேண்டாம் - நீங்கள் எல்லா தகவல்களையும், வெற்றிக்கான வழிகளையும் தெளிவாக படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இ) 20ஆம் நாள் முதல் 40ஆம் நாள் வரைநாம் இது போல இரண்டு டாலருக்காக எல்லாம் மாசக்கணக்காக போராடிக் கொண்டிருக்க தேவையில்லை. முதல்
இருபது நாட்கள் தான் நமது வெற்றிக்கு அடித்தளம். 20 நாட்கள் நீங்கள்
தருகின்ற உழைப்பு 0.6$ ஆக மாறியிருக்கும். இதை அப்படியே நியோபக்ஸில்
பெருக்க வேண்டியதுதான். எப்படி? முதலில் சில 'ரெண்ட் ரெபிரல்களை' பெற
வேண்டும். ரெண்ட் ரெபிரல்கள் என்றால் உங்களது லாபத்தை அதிகரிக்கும் பிற
நியோபக்ஸ் உறுப்பினர்கள். இவர்களும் உங்களைப் போல பணிபுரிபவர்கள் தான். ஒரு
நியோபக்ஸ் உறுப்பினர் உங்களது ரெண்ட் ரெபிரலாகிவிட்டால் அவர் எவ்வளவு
சம்பாதிக்கிறாரோ அதில் பாதி அளவு உங்களது கணக்கில் சேரும். உதாரணத்திற்கு
ஒரு உறுப்பினர் ஒருநாளில் 0.03$ சம்பாதித்து இருக்கிறார் என்று வைத்து
கொள்வோம். அவர் உங்களது ரெண்ட் ரெபிரலாக இருந்தால் உங்களுக்கு அந்த நாளில்
0.015$ கமிசனாக கிடைக்கும். அவர் சம்பாதித்த 0.03$-இல் இருந்து இந்த தொகை எடுக்கப்பட மாட்டாது, நியோபக்ஸே இந்த கமிசனை உங்களுக்கு தந்துவிடும். அந்த உறுப்பினருக்கு எந்த இழப்பும் இல்லை.
ரெண்ட்
ரெபிரல்களை நியோபக்ஸ் விலைக்கு விற்கிறது. ஒரு மாதத்திற்கு ஒரு ரெண்ட்
ரெபிரலின் விலை 0.2$. நீங்கள் 0.6$ சம்பாதித்தவுடன் 3 ரெண்ட் ரெபிரல்களை
ஒரு மாதத்திற்கு விலைக்கு வாங்கலாம். இப்பொழுது உங்களது நியோபக்ஸை லாகின்
செய்து, 'Rental Balance (+)' என்ற நீல நிற பட்டனை அழுத்துங்கள். பின்பு
'Main Balance' என்ற பச்சை நிற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது நீங்கள்
Main Balance-இல் சம்பாதித்த 0.6$, Rental Balance-ஆக மாறிவிடும். கீழுள்ள
படத்தை பாருங்கள்.
இப்பொழுது
நீங்கள் ரெண்ட் ரெபிரல்களை வாங்கலாம். மீண்டும் முதல் பக்கத்திற்கே சென்று
'Referrals' என்ற பச்சை பட்டனை அழுத்தவும். பின்பு '3 ரெபிரல்' பேக்கை
தேர்ந்தெடுத்து ரெபிரல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். கீழுள்ள படம்
உங்களுக்கு வழிகாட்டும்.
கட்டணத்தை
செலுத்திய பின்பு, நியோபக்ஸ் 3 உறுப்பினர்களை உங்களது ரெண்ட்
ரெபிரல்களாக்கிவிடும். ஒரு மாதம் இந்த மூவரும் என்ன சம்பாதிக்கிறார்களோ
அதில் பாதி அளவு உங்களுக்கு கமிசனாக கிடைக்கும். இப்பொழுது ஒரு மாதம்
இருக்கிறது. அடுத்த 20 நாட்களுக்கு (20ஆம் நாள் முதல் 40ஆம் நாள் வரை)
வருகின்ற லாபத்தின் கணக்கு.
உங்களது நேரடி வருமானம்: 0.6$
ரெண்ட் ரெபிரல்கள் மூலம் கிட்டிய கமிசன்: 0.3 X 3 = 0.9$
உங்களது மொத்த வருமானம்: 0.6 + 0.9 = 1.5$
ஈ) 40ஆம் நாள் முதல் 50ஆம் நாள் வரை:அடுத்த பத்து நாளிற்கு பிறகு இந்த மூன்று ரெண்டல் ரெபிரல்களும் உங்களை விட்டு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
எனவே சரியாக 40ஆம் நாள் முடியும் போது உங்களது Main Balance-இல் உள்ள 1.5
டாலரை மீண்டும் Rental Balance-ஆக மாற்றி விடுங்கள். இப்பொழுது 0.6$-ஐ
கொண்டு கூடுதலாக 3 ரெண்ட் ரெபிரல்களை வாங்குங்கள். மீதமுள்ள 0.9$ அப்படியே
Rental Balance-இல் இருக்கட்டும். அதன் பின்பு Rental Referrals என்ற
ஐக்கானை சொடுக்கி 'Autopay = Enabled' என்று மாற்றி விடுங்கள். (கீழே
பார்க்கவும்)
நீங்கள் எப்பொழுது "Autopay = Enabled" என்று மாற்றினீர்களோ, அதுமுதல் உங்களது ரெண்ட் ரெபிரல்களின் காலம் நீண்டுகொண்டே இருக்கும்.
உதாரணத்திற்கு, 41ஆம் நாள் ஆரம்பித்துவிட்டது என வைத்து கொள்ளுங்கள்,
உங்களது முதல் மூன்று ரெண்ட் ரெபிரல்களின் காலம் முடிய இன்னும் 9 நாட்கள்
தான் உள்ளன. இப்பொழுது மூவரில் யாராவது விளம்பரங்களை கிளிக் செய்தால், அந்த
நபரது காலம் இன்னும் ஒரு நாள் கூடி 10 நாட்கள் என ஆகிவிடும். எனவே 42ஆம்
நாள் ஆரம்பிக்கும் போது (10-1)
அந்த குறிப்பிட்ட ரெபிரலின் காலம் 9 நாட்களாகவே இருக்கும். 42ஆம் நாளில்
அவர் மீண்டும் கிளிக் செய்தால் அவரது காலம் மீண்டும் ஒரு நாள் கூடி 10
நாட்கள் என ஆகிவிடும். எனவே 43ஆம் நாளிலும் (10-1)
அந்த ரெபிரலின் காலம் 9 நாட்களாகவே இருக்கும். இவ்வாறு அந்த ரெபிரல்
நீண்டுகொண்டே போவார். 43ஆம் நாள் அந்த ரெபிரல் விளம்பரங்களை கிளிக்
செய்யாவிடில், 9 நாட்கள் 10 நாட்களாக கூடாது. எனவே 44ஆம் நாள் ஆரம்பிக்கும்
போது (9-1), அவரது
காலம் முடிய 8 நாட்கள் தான் இருக்கும். 44ஆம் நாள் அவர் கிளிக் செய்தால்,
அவரது காலம் ஒரு நாள் கூடி, 9 நாட்கள் என ஆகிவிடும். எனவே 45ஆம் நாள்
ஆரம்பிக்கும் போது (9-1) அவருக்கு எட்டு நாட்களே மீண்டும் இருக்கும்.....
ஒரு
ரெபிரலுக்கு Autopay மூலம் நாட்களை நீடிக்க ஒரு நாளுக்கு 0.0057$
செலவாகும். ஒரு ரெண்ட் ரெபிரல் ஒரு நாளில் கிளிக் செய்தால் அவரது காலத்தை
இன்னும் ஒரு நாளாக கூட்டிவிட்டு உங்களது Rental Balance-இல் இருந்து
0.0057$-ஐ நியோபக்ஸ் எடுத்துவிடும். எனவே, உங்களது Rental Balance
0.8943-ஆக குறையும். அதே நாளில் இன்னொரு ரெபிரல் கிளிக் செய்தால் அவரது
காலத்தையும் இன்னும் ஒரு நாளாக கூட்டிவிட்டு 0.0057$-ஐ எடுத்துவிடும்.
இப்பொழுது Rental Balance, 0.8886$-ஆக குறைந்துவிடும். இவ்வாறு Autopay
வசதியவை இயக்கியவுடன் உங்களது Rental Balance-இல் உள்ள 0.9$ கொஞ்சம்
கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். எதாவது ரெபிரல் கிளிக் செய்யாவிடில்,
Autopay காசையும் எடுக்காது, நாட்களையும் கூட்டாது. புரியவில்லை என்றால்
மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள். கீழுள்ள படம் தெளிவாக புரிந்து கொள்ள
பயன்படும்....
நீங்கள்
'Autopay' வசதியை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கடைசி
நாளில் கூட மூவருக்கும் சேர்த்து 0.6$ செலுத்தி அவர்களை இன்னும் 1
மாதத்திற்கு உங்களது ரெண்ட் ரெபிரல்களாகவே வைத்துக் கொள்ளலாம். இதற்கு
'Autorenew = Enabled' என்று மாற்ற வேண்டும். ஆனால் 'Autopay' தான் லாபமான
வழி.
Autopay(ஒரு ரெபிரல்)
1) கட்டணம்:ஒரு நாளிற்கு = 0.0057$
எனவே ஒரு மாதத்திற்கு = 0.17$
2) இழப்பு இல்லை:ரெண்ட்
ரெபிரல் கிளிக் செய்தால் மட்டுமே கட்டணம் எடுக்கப்படும், ரெபிரலின் காலம்
ஒரு நாள் கூட்டப்படும். எனவே, ரெண்ட் ரெபிரல் கிளிக் செய்யும் நாட்கள்
மட்டுமே கணக்காகிறது. இதனால் 'Autopay' மூலம் செலுத்தப்படும் கட்டணம்
சிறிதளவும் வீணாகாது.
|
Autorenew(ஒரு ரெபிரல்)
1) கட்டணம்:ஒரு மாதத்திற்கு = 0.2$
எனவே ஒரு நாளிற்கு = 0.0066$
2) இழப்பு நேரலாம்:ரெபிரல்
கிளிக் செய்கிறார், செய்யவில்லை என்பதில் எல்லாம் கணக்கு கிடையாது. 0.2$
செலுத்தியவுடன் ரெண்ட் ரெபிரலின் காலம் 30 நாட்களாக கூடிவிடும். ரெபிரல் 1
நாள் கிளிக் செய்யாவிடினும் அந்த நாளிற்கு என நாம் செலுத்தின 0.0066$
வீண்தான்.
|
இப்பொழுது
உங்களுக்கு Autopay, Autorenew, Rental Balance, Main Balance, ரெண்ட்
ரெபிரல் என்பவை எல்லாம் என்ன என்று ஒரளவு புரிந்திருக்கும். நேரடியாக நியோபக்ஸில் செய்து பார்க்கும் போது உங்களுக்கு நன்றாக தெளிவாகிவிடும்....
நீங்கள்
Autopay, Autorenew இரண்டையுமே 'Enabled' ஆக வைத்திருக்க வேண்டும்.
'Autopay' இயங்கி கொண்டிருக்கும் வரை 'Autorenew' செயல்படாது.
உதாரணத்திற்கு ஒரு ரெபிரலின் காலம் முடிய பத்து நாள் இருக்கிறது என
வைத்துக்கொள்ளுங்கள். அவர் கிளிக் செய்து கொண்டிருக்கும் வரை அவரது நாட்கள்
தினமும் தள்ளிபோய் கொண்டே இருக்கும். ஒருவேளை அவர் கிளிக் செய்வதை சிறிது
காலம் நிறுத்திவிட்டால் Autopay இயங்காது. அவரது பத்து நாட்கள் ஒன்பது,
எட்டு, ஏழு.. என குறைய ஆரம்பித்துவிடும். இப்படியே குறைந்து கடைசி நாளை
எட்டும் போது Autorenew தானாக உங்களது Rental Balance-இல் இருந்து 0.2$
எடுத்துகொண்டு அந்த ரெபிரலின் காலத்தை மீண்டும் முப்பது நாட்களாக
கூட்டிவிடும்.
இவ்வாறு Autopay,
Autorenew என்ற இந்த இரு வசதிகளும் தானாக மாறிமாறி இயங்கி உங்களது
ரெபிரல்களின் நாட்களை கூட்டி கொண்டிருக்கும். எனவே நீங்கள் Autopay,
Autorenew இரண்டையுமே 'Enabled' ஆக வைத்திருப்பது நல்லது. இல்லாவிடில்
Autopay-ஐ மட்டும் வைத்திருந்தால் கூட போதுமானது. Autopay, Autorenew
உங்களுக்கு குறித்து புரிய வைக்க தான் இவ்வளவு விளக்கங்களும். உங்களது
ரெண்ட் ரெபிரல்களின் காலத்தை குறித்து இனி கவலை வேண்டாம்.
41 ஆம் நாள் அன்று,
- உங்களது Main Balance-இல் உள்ள 1.5 டாலரை Rental Balance-ஆக மாற்றிவிட்டீர்கள்.
- 0.6 டாலரை பயன்படுத்தி கூடுதலாக 3 ரெண்ட் ரெபிரல்களை வாங்கிவிட்டீர்கள்
- Autopay & Autorenew = Enabled என மாற்றி விட்டீர்கள்
இப்பொழுது
உங்களிடம் மொத்தம் 6 ரெண்ட் ரெப்பிரல்கள் உள்ளனர் (பழைய 3 + புதிய 3).
அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என காணலாம் வாருங்கள்.
41ஆம் நாள் முதல் 50ஆம் நாள் வரை வருகின்ற லாபம்
உங்களது நேரடி வருமானம் = 0.3$
ரெண்ட் ரெப்பிரல்கள் மூலம் கிட்டும் கமிசன்: 0.15 X 6 = 0.9$
உங்களது மொத்த வருமானம்: 0.3+0.9 = 1.2$
உ) 51ஆம் நாள் முதல்சரியாக
51ஆம் நாள் அன்று Main Balance-இல் உள்ள 1.2$ Rental Balance-ஆக
மாற்றுங்கள். அதில் 0.6$-ஐ மட்டும் பயன்படுத்தி இன்னும் 3 ரெண்ட்
ரெபிரல்களை வாங்குங்கள். மீதமுள்ள 0.6$-ஐ Autopay கட்டணத்திற்கு பயன்பட
விட்டுவிடுங்கள். இப்பொழுது உங்களிடம் 9 ரெண்ட் ரெபிரல்கள் உள்ளனர்.
எனவே, 51ஆம் நாள் - 60ஆம் நாள் உங்களுக்கு வருகின்ற லாபம்,
உங்கள் வருமானம் + (9 ரெண்ட் ரெபிரல் கமிசன்) = 0.3 + 1.35 = 1.65$.
60
நாட்கள் முடியும் போது உங்களுக்கே நியோபக்ஸ் என்றால் என்ன, எப்படியெல்லாம்
திட்டமிட்டு செயல்படவேண்டும் என்ற அனுபவம் கிட்டிவிடும். இனிமேல் இதே போல
உங்களால் முடிந்த எண்ணிக்கையில் ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கி கொண்டே
இருங்கள். மறுபுறம் சிறிது தொகையை Autopay கட்டணத்திற்கு விட்டுகொண்டு
இருக்கவேண்டும் - இதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ரெப்பிரல்களை
வாங்கவாங்க உங்களது வருமானம் 2,4,8,16,32,64,128... என பெருகி கொண்டே
போகும்.
300 ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கியவுடன், நியோபக்ஸ் மூலம் ஒரு மாதத்திற்கு 150 டாலர்களுக்கு மேலாக கிடைக்க ஆரம்பித்துவிடும். இப்பொழுது,
ரெபிரல்கள் வாங்குவதை நிறுத்துங்கள். இனி நீங்கள் கோல்டன் உறுப்பினராக
(சிறப்பு உறுப்பினர்) வேண்டும். நீங்கள் சாதாரண உறுப்பினராக இருக்கும் வரை
உங்களுக்கு ஒரு விளம்பரத்திற்கு 0.001 டாலரும் உங்களது ரெபிரல் கிளிக்
செய்யும் ஒரு விளம்பரத்தின் கமிசனாக 0.0005 டாலரும் மட்டுமே
கிடைத்துக்கொண்டு இருக்கும். கோல்டன்
உறுப்பினர் ஆகிவிட்டால் உங்களது வருமானம் 10 மடங்கு அதிகரிக்கும். அதாவது,
நீங்கள் கிளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு 0.01 டாலரும் உங்களது
ரெபிரல் கிளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு 0.005 டாலரும் கிடைக்கும்.
எனவே, உங்களது வருமானமும் 150 X 10 என அதிகரித்து மாதம்மாதம் 1500 டாலர்கள்
வரை கிடைக்கும். நீங்கள் ரெண்ட் ரெபிரல்களை இனிமேலும்
வாங்கினால் உங்களது வருமானம் மேலும் வளர்ந்து கொண்டே போகும்... கோல்டன்
உறுப்பினர் ஆக Standard (+) என்ற பச்சை நிற பட்டனை செலுத்தி 90$ செலுத்த
வேண்டும். 300 ரெண்ட் ரெப்பிரல்கள் கிடைத்தவுடன் இத்தொகை உங்களுக்கு ஒரு
பெரிய அளவாகவே இருக்காது.
கோல்டன்
உறுப்பினராகி, அதோடு 300 ரெண்ட் ரெப்பிரல்களை வைத்திருந்தால் உங்களுக்கு
மாதம் மாதம் 1000 டாலர்களுக்கு மேல் எளிதாக கிடைத்துவிடும். இதுதான்
நியோபக்ஸ். இணையத்தில் சம்பாதிப்பவர்களில் பலர் இதற்குதான் முயன்று
கொண்டிருக்கிறார்கள்.
ஊ) எப்படி திட்டமிடவேண்டும்?இப்படித்தான்,
இங்கு நீங்கள் கண்டமாதிரி தான் செய்யவேண்டும் என்றெல்லாம் இல்லை. இந்த
வேலையை குறித்து விவரங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.
உங்களுக்கு பிடித்தது போல செயல்படலாம். நீங்களாகவே சுயமாக திட்டமிட்டு
செயல்படலாம். யாருக்கு தெரியும்? உங்களது செயல் இங்கு கூறப்பட்டுள்ள வழிகளை
விட சிறந்ததாக இருக்க கூடும். தினமும், 5 நிமிடம் செலவிட முடியும் என்று
சொல்ல முடியாது. சில நாட்களில் உங்களது வாழ்க்கை சூழ்நிலைகளால் கிளிக்
செய்ய முடியாமல் போகலாம். இல்லை 60 நாட்களுக்குள்ளாகவே நீங்கள் பல ரெண்ட்
ரெப்பிரல்களை வாங்கி குவித்து வேகமாக முன்னேறி இருக்கலாம்...
எப்படி வேண்டுமானாலும் உங்களது செயல் அமைய வாய்ப்புள்ளது. எனவே முழுக்க முழுக்க உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள். அதோடு
இந்த வேலையை செய்யனும் வென்றாகவேண்டும் என்று செய்யத்தேவையில்லை.
சாதாரணமாக, இணையத்தை உலாவும் போது, ஒரு ஐந்து நிமிடம் இதில்
பயன்படுத்தினால் போதும். நியோபக்ஸில் இன்னும் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
- கிளிக் செய்து சம்பாதிப்பது போல, இன்னும் சின்னசின்ன வேலைகள் கூட உள்ளன.
இதனை 'Offers - Minijobs' என்ற தலைப்பின் கீழ் காணலாம். வேலையை எப்படி
செய்ய வேண்டும் என்று தகவல்கள் தரப்பட்டிருக்கும். அதை படித்து, அதில் உள்ள
படி செயல்பட்டால், ஒரு வேலைக்கு 0.03$ வரை கிடைக்கும்.
- 'Banners'
என்ற தொடுப்பை கிளிக் செய்தால், ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் link
என்ற தலைப்பின் கீழ் உங்களுக்கென ஒரு வலைமுகவரி கொடுக்கப்பட்டிருக்கும். அதனை
உங்களது நண்பர்களிடம் கொடுத்து நியோபக்ஸிற்கு வரவேற்கலாம். அந்த வலைமுகவரி
வழியாக இணையும் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு நிரந்தரமான ரெபிரல்களாக
மாறிவிடுவார்கள். இவ்வாறு நீங்கள் இருவரும் நன்மை அடைவீர்கள்.
- நியோபக்ஸை
லாகின் செய்தபின்பு, அதன் அடிபாகத்தில் 'Ad-alert' என்ற தொடுப்பை காணலாம்.
அதனை கிளிக் செய்தால், உங்களது பிரவுசருக்கு ஏற்றதுபோல, ஒரு சின்ன Addon
கிடைக்கும். அதனை உங்களது பிரவுசரில் பொறுத்தி கொண்டால், அது புது விளம்பரங்கள் கிடைக்கும் போதெல்லாம் ஒலி எழுப்பி உங்களுக்கு தெரிவிக்கும். இதனால் நீங்கள் அதிகமான விளம்பரங்களை காணலாம்.
மேலும் சில உபயோகமான குறிப்புகள்:இப்பொழுது
ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். நியோபக்ஸ் வேலையே நமக்கு 1000
டாலர்களுக்கு மேலாக தரும்போது இந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற
வேலைகள் எதற்கு? நியோபக்ஸில் மட்டும் முயன்று வெல்லலாமே. ஆனால்
காரணத்தோடுதான் அவைகளும் உங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
நியோபக்ஸ்
என்னதான் கொட்டிகொடுத்தாலும் எடுத்தவுடன் அதில் வெற்றி பெற முடியாது.
இரண்டு மாதளவு அது மண்ணைப்போல தான் இயங்கி கொண்டிருக்கும். அதோடு ரெண்ட்
ரெப்பிரல்கள் எல்லாம் சேர்க்கவே சிறிதுகாலம் ஆகும்.
இக்காலங்களில் உங்களுக்கு பிற வெப்சைட்கள் மிகவும் உதவும். அவைகளை பயன்படுத்தி நாம் இணையத்தில் சம்பாதித்துக் கொண்டு இருக்கலாம். உதாரணத்திற்கு,
டேட்டா என்ட்ரி வெப்சைடில், நமது உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஒரு
நாளிற்கு இவ்வளவுதான் சம்பாதிக்க முடியும் என்ற கட்டுப்பாடு இல்லை. எனவே
நீங்கள் அதனைப் பயன்படுத்தி 10 டாலர்கள் சம்பாதித்து உங்களது பேசா
அக்கௌண்டிற்கு எடுத்துக்கொள்ளுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். இந்த
பணத்தை நீங்கள் நியோபக்ஸிற்கு பயன்படுத்தலாம். பேசாவில் உள்ள இந்த 10 டாலரை
நியோபக்ஸ் Rental Balance-ஆக மாற்றலாம். கீழுள்ள படத்தை பார்க்கவும்.
கடைசி
கட்டம் வரை வந்து, உங்களது பேசா ஈமெயில் முகவரியையும் கடவுச்சொல்லையும்
இட்டால் உங்களது பேசா கணக்கில் இருந்து நியோபக்ஸ் அக்கௌண்டிற்கு 10$
மாறிவிடும். இந்த பத்து டாலரை கொண்டு 50 ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கலாம்
அல்லது Autopay, Autorenew போன்ற வசதிகளுக்கு பயன்படுத்தலாம். நீங்கள்
நியோபக்ஸிலேயே 10$ சம்பாதித்து அதனை Rental Balance-ஆக மாற்றி பின்
ரெப்பிரல்களை வாங்கி வெற்றி பெற அதிக நாள் ஆகும். ஆனால்
இது போல பல வெப்சைட்களை பயன்படுத்தி சம்பாதித்து வரும்போது எளிமையாகயும் வெகுசீக்கிரமாகவும் வெல்லலாம். உங்களது
பேசா கணக்கில் பணம் சேரும் போது, அதனை நியோபக்ஸில் செலுத்தி எவ்வளவு
சீக்கிரம் 300 ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கமுடியுமோ வாங்கிவிடலாம். பேசாவில்
உள்ள பணத்தை இணையத்திலேயே எப்படி பயன்படுத்தலாம் எனபதற்கு இது ஓர்
எடுத்துக்காட்டு. பிற வெப்சைட்களிலும் இவ்வாறு பேசாவை பயன்படுத்தி எதாவது
வாங்கலாம், Balance அதிகரிக்கலாம்,முதலீடு செய்யலாம்....
எனவே
எல்லாமே உங்கள் கையில் தான் உள்ளது. உங்களுக்கு தேவையான தகவல்களை எல்லாம்
கொடுத்தாயிற்று. இனிமேல், நீங்கள் உங்களுக்கு தோன்றுவது போல செயல்பட்டு
வெற்றி பெற வேண்டியது தான்.
கவனத்தில் கொள்ளவேண்டியவை:
- நியோபக்ஸில் எக்காரணத்தை கொண்டும் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை தொங்கவே கூடாது.
உறவினர்கள், நண்பர்கள் என யாருக்கும் நீங்களாகவே உங்களது கணினி மற்றும்
இணைய இணைப்பு மூலம் இன்னொரு அக்கௌண்ட்டை தொடங்கி விடாதீர்கள். நியோபக்ஸ்
இந்த விடயத்தில் கண்டிப்புடன் செயல்படுகிறது. இதனை மீறினால், நாம்
நியோபக்ஸில் வேலைபுரியும் வாய்ப்பை நிரந்தரமாக இழந்துவிடுவோம்.
- கணக்கை
30 நாட்கள் லாகின் செய்யாமல் விட்டுவிட்டால் கணக்கில் சேர்த்து வைத்துள்ள
தொகை, ரெண்ட் ரெப்பிரல்கள், ரெண்டல் பேலன்ஸ், இலவச ரெப்பிரல்கள் என எல்லாம்
அழிந்துவிடும். 60 நாட்களுக்கு லாகின் செய்யாவிடில், கணக்கே
அழிந்துவிடும். அதன்பின் புது கணக்கும் தொடங்கமுடியாது. எனவே 30 நாட்களுக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக லாகின் செய்ய வேண்டும்.
- ரெண்டல்
ரெப்பிரல்கள் வாங்கிவிட்டால் போதும், அவர்கள் கிளிக் செய்யசெய்ய கமிசன்
வந்து கொண்டே இருக்கும் என கிடையாது. அந்த கமிசன் உங்களுக்கு வேண்டுமானால்
நீங்களும் கிளிக் செய்யவேண்டும். நீங்கள்
குறைந்தது நான்கு மஞ்சள் நிற விளம்பரங்களை இன்று கிளிக் செய்தால் தான்,
நாளை உங்களது ரெண்ட் ரெப்பிரல்கள் கிளிக் செய்வதன் மூலம் கிடைக்கும் கமிசன்
கிடைக்கும்.
நிறைய மக்கள் நியோபக்ஸ் மூலம்
கிளிக் செய்து சம்பாதிக்கலாம் என நினைத்து கொண்டு வருவார்கள். ஆனால்
ஆன்லைன் வேலைகளுக்குள் நுழைந்ததும் ஆரம்பத்திலேயே அள்ளி கொடுப்பது போல
ஈர்த்திழுக்கும் பல வெப்சைட்களை காண நேரிடும். எனவே நியோபக்ஸில் வருமானம்
குறைவாக உள்ளதாக நினைத்து விட்டுவிட்டு போய் விடுவார்கள். ஒன்றை புரிந்து
கொள்ளுங்கள் -
அதுபோல முயற்சிக்கு இடம் இல்லாமல் எடுத்தவுடனே அள்ளி கொடுப்பதாக வாக்களிக்கும் வெப்சைட்கள் எல்லாம் கத்துக்குட்டிகள். புதிதாக
ஆரம்பிக்கப்பட்டவைகளாக தான் இருக்கும். அதன் நிர்வாகமும் அனுபவம் அற்றதாய்
இருக்கும். உறுப்பினர்களை சீக்கிரமாக சேர்ப்பதற்காக அந்த மாதிரி
விளம்பரப்படுத்துவான். அதை நம்பி நல்ல வெப்சைட்களை விட்டுவிட்டு
செல்வார்கள். அந்த தளத்தில் பணிபுரியும் போது, சில பேர் நன்றாக வேலை
பார்க்கவும் ஆரம்பிப்பார்கள். நிர்வாகத்தால் அந்த வெப்சைட்டை நடத்த முடியாத
அளவுக்கு எல்லாரும் Balance சேர்த்துவிடுவார்கள். தளநிர்வாகம் ஏன்
வாக்களித்தோம் என்று எண்ணும் அளவிற்கு நஷ்டத்தில் சென்று கொண்டு இருக்கும்.
அதனை நம்பினவர்களது நிலை என்னாகும்? ஆனால் இங்கு கூறப்பட்டுள்ள தளம்
எல்லாம் 5 வருடங்களுக்கு மேலாக சுமூகமாக போய் கொண்டிருக்கின்றன.
ஒரு ஆன்லைன் வேலைத்தளம் இத்தனை காலம் சுமூகமாக சென்றாலே அது மிகப்பெரும் சாதனை.
நிர்வாகம் திறம்பட செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். அதோடு, 5
வருடங்களுக்கு மேலாக அந்த தளத்தை திறமையாக நிர்வகிப்பதினால், அதன்
வலைமுகவரி பிரபலமாகி விலைமதிப்பில் பெருமளவு உயர்ந்துவிடும்.
உதாரணாத்திற்கு neobux.com என்ற முகவரி பல கோடி மதிப்புடையதாக இன்று
உள்ளது. எனவே எக்காரணத்திற்காகவும் இந்த வெப்சைட்கள் தங்கள் நற்பெயரை
கலங்கப்படுத்திக் கொள்ளாது. இப்பொழுது விட்டுவிட்டு சென்றவர்கள் எல்லாம்
இந்த சங்கதிகளையும், பழைய வெப்சைட்களில் மக்கள் வெற்றி பெறுவதையும்
குறித்து கேள்விப்பட ஆரம்பிப்பார்கள். எனவே மீண்டும் இந்த தளங்களுக்கு
திரும்பி வர ஆரம்பிப்பார்கள். ஆனால் என்ன பயன்? 60 நாட்கள் லாகின்
செய்யாவிட்டால் கணக்கும் அழிந்துவிடும், புதிதாக மீண்டும் சேரவும்
முடியாது!
நீங்கள் வேலைப்பார்க்க விரும்பும் தளத்தில் பணியாற்றுவது உங்கள் உரிமை.
ஆனால் எதற்கும் இங்கு கூறப்பட்டுள்ள தளங்களில் ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு மாதத்திற்கு ஒரு முறை லாகினாவது செய்யுங்கள். ஒருவேளை இந்த
தளங்களுக்கே மீண்டும் சென்று விடலாம் என்று எண்ணும் காலம் நேரும் போது,
கணக்குகள் அழியாமல் உங்களிடமே இருக்கும். உங்களுக்கு மீண்டும் ஒரு
சந்தர்ப்பமும் இதனால் கிடைக்கும். "இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?"
என்றாலே, இவ்வாறு எல்லா தகவல்களையும் கூறுவதுதான் நல்லது.
நியோபக்ஸ் போல இன்னும் 2 தளங்கள் கீழே உள்ளன. இவைகளை நியோபக்ஸிற்கு குறைவாக எண்ணாதீர்கள்.
இவைகளும் அதே அளவு மதிப்பு, வருமானம், நம்பிக்கை, நற்பெயர் மிக்கவை தான். கிளிக்
செய்து சம்பாதிக்கலாம், சிறுவேலைகளை செய்து சம்பாதிக்கலாம்... ரெண்டல்
ரெப்பிரல் என்ற ஒரு வசதி மட்டுமே இவைகளில் இல்லை. ஆனால் நீங்கள்
உங்களுக்கென தரப்படும் பிரத்யேக வலைமுகவரி வழியாக உங்களது நண்பர்களை
இத்தளங்களில் சேர்க்கலாம். அதனால் உங்கள் நண்பர்களும் பயனடைவார்கள்,
உங்களுக்கு ரெப்பிரல்களாக செயல்படுவார்கள். இந்த முகவரி Referral Link /
Affiliate Link என்ற தலைப்பிட்டு காணப்படும். எனவே உங்களது தனிமுகவரியை
நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். இத்தளங்களிலும் ஒரே கணக்கு மட்டுமே
வைத்திருக்க வேண்டும், முப்பது நாளிற்கு ஒரு முறையாவது லாகின்
செய்யவேண்டும்.